PDF chapter test TRY NOW

இரட்டைப்படை எண்களின் தொகுப்பைப் பல்வேறு வகைகளில் விவரிக்கலாம்:
 
1. "இரட்டைப்படை எண்களின் கணம்" என எழுதலாம்.
 
2. \(\{2, 4, 6, 8, ...\}\) என எழுதலாம்.
 
3. \(x\) ஆனது ஒரு இரட்டைப்படை எண், அதன் தொகுப்பைக் காண்க எனவும் எழுதலாம்.
 
இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று சமமானவை.
ஒரு கணத்தினை மூன்று வழிகளில் குறிப்பிடலாம்.
 
(i) விவரித்தல் முறை (Descriptive Form)
 
(ii) கணக்கட்டமைப்பு முறை (அல்லது) விதி முறை (Set Builder Form or Rule Form)
 
(iii) பட்டியல் முறை (அல்லது) அட்டவணை முறை (Roster Form or Tabular Form)
இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
விவரித்தல் முறை
ஒரு கணத்தில் உள்ள உறுப்புகளை வார்த்தைகளில் விவரிக்கும் முறையே விவரித்தல் முறை என்று அழைக்கப்படுகிறது.
Example:
\(A =\) வர்க்கங்களின் தொகுப்பு
 
\(B = \) வருடத்தில் உள்ள மாதங்கள்
கணக்கட்டமைப்புமுறை (அல்லது) விதி முறை
ஒரு கணத்தில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நிறைவு செய்யும் பண்புகளின் அடிப்படையில் கணத்தைக் குறிப்பிடும் முறையே கணக்கட்டமைப்பு முறை ஆகும்.
Example:
\(A = \{x | x \ \text{என்பது வர்க்க எண்} \}\)
 
\(B = \{x | x \ \text{என்பது மாதங்கள்}\}\)
பட்டியல் முறை (அல்லது) அட்டவணை முறை
ஒரு கணத்தில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பட்டியலிடுவது பட்டியல் முறை அல்லது அட்டவணை முறை என்றழைக்கப்படுகிறது.
Example:
\(A = \{1, 4, 9, 16, ...\}\)
 
\(B = \{\text{சனவரி}, \text{பிப்ரவரி}, \text{மார்ச்}, .. \text{டிசம்பர்}\}\)