PDF chapter test TRY NOW
(i) ஒரு கணமானது A, B, P, Q, X, Y, போன்ற ஆங்கில பெரிய எழுத்துகளால் குறிப்பிடப்படுகிறது.
(ii) ஒரு கணத்தின் உறுப்புகள் a, b, c, .. போன்ற ஆங்கில சிறிய எழுத்துகளால் குறிப்பிடப்படுகிறது.
(iii) ஒரு கணத்தின் உறுப்புகளை, “\{ \}” என்ற கண அடைப்பு அல்லது வில் அடைப்பிற்குள் எழுத வேண்டும்.
(iv) x என்பது கணம் A இன் உறுப்பு என்பதை x \in A என எழுதுவோம்.
(v) x என்பது கணம் A இன் உறுப்பு அல்ல என்பதை x \notin A என எழுதுவோம்.
Example:
A = \{2, 4, 6, 8, 10\} என்ற கணத்தை எடுத்துக் கொள்க.
இங்கே 2 ஆனது A இன் உறுப்பு. அதாவது 2 \in A .
4 ஆனது A இன் உறுப்பு. அதாவது 4 \in A .
6 ஆனது A இன் உறுப்பு. அதாவது 6 \in A .
8 ஆனது A இன் உறுப்பு. அதாவது 8 \in A .
10 ஆனது A இன் உறுப்பு. அதாவது 10 \in A .
ஆனால், 5 ஆனது A இன் உறுப்பு அல்ல. அதாவது 5 \notin A .
நாம் கணங்களில் பயன்படுத்தும் குறியீடுகள்:
குறியீடு | பொருள் | உதாரணம் |
உறுப்பு (belongs to) | எனில், 3A. | |
உறுப்பு அல்ல (does not belongs to) | எனில், 6A. | |
: or | | அதன்படி (அல்லது) என்றவாறு | என்பது A = \{x: x \ \text{ஒரு இயல் எண்}, 3 \le x \le 5\} |
இயல் எண்கள் | ||
\mathbb{W} | முழு எண்கள் | \mathbb{W} = \{0, 1, 2, 3,...\} |
முழுக்கள் | ||
விகிதமுறு எண்கள் | \mathbb{Q} = \left\{\frac{p}{q}, q \ne 0, p \ \text{மற்றும்}\ q \ \text{முழுக்கள்} \right\} | |
மெய்யெண்கள் |