PDF chapter test TRY NOW
முடிவுறு கணம் (Finite set)
முடிவுறு எண்ணிக்கையில்(கணக்கிட முடிந்த அளவு) அமைந்த உறுப்புகளைக் கொண்ட கணம் முடிவுறு கணம் எனப்படும்.
Example:
1. ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களின் கணம்
2. தமிழ் எழுத்துக்களின் கணம்
3. \(50\)க்குள் உள்ள நேர்மறை முழுக்களின் கணம்
4. \(420\) இன் காரணிகளின் கணம்
முடிவுறாக் கணம் (Infinite set)
ஒரு கணத்தில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை முடிவுறு எண்ணிக்கையில் இல்லை எனில் அக்கணம், முடிவிலாக் கணம் அல்லது முடிவுறாக் கணம் எனப்படும்.
Example:
1. விகிதமுறு எண்களின் கணம்.
2. தமிழ் சொற்களின் கணம்.
3. ஒரு புள்ளியின் வழியே பாயும் அனைத்துக் கோடுகளின் கணம்.
ஒரு கணத்தின் ஆதி எண் (Cardinality number):
ஒரு முடிவுறு கணத்தில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை அக்கணத்தின் ஆதி எண் எனப்படும். \(A\) என்ற கணத்தின் ஆதி எண்ணை \(n(A)\) எனக் குறிப்பிடுவோம்.
Example:
தமிழில் உள்ள உயிரெழுத்துக்களின் கணம்:
\(B = \{\text{அ}, \text{ஆ}, \text{இ}, \text{ஈ}, \text{உ}, \text{ஊ}, \text{எ}, \text{ஏ}, \text{ஐ}, \text{ஒ}, \text{ஓ}, \text{ஔ}\}\)
இது ஒரு முடிவுறுக்கணம். இதில் உள்ள உறுப்புகள் \(12\).
\(n(B) = 12\)