PDF chapter test TRY NOW

1. \(45\) பேர் கொண்ட ஒரு குழுவில் ஒவ்வொருவரும் தேநீர் அல்லது குளம்பி (Coffee) அல்லது இரண்டையும் விரும்புகிறார்கள். \(35\) நபர்கள் தேநீர் மற்றும் \(20\) நபர்கள் குளம்பி விரும்புகிறார்கள். கீழ்க்காணும் நபர்களின் எண்ணிக்கையைக் காண்க.

(i) தேநீர் மற்றும் குளம்பி இரண்டையும் விரும்புபவர்கள்

(ii) தேநீரை விரும்பாதவர்கள்

(iii) குளம்பியை விரும்பாதவர்கள்
 
 
2. ஒரு தேர்வில் கணிதத்தில் \(50\%\) மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் மற்றும் \(70\%\) மாணவர்கள் அறிவியலில் தேர்ச்சி பெற்றனர். மேலும் \(10\%\) இரண்டிலும் தேர்ச்சி பெறாதோர். \(300\) மாணவர்கள் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த இரு தேர்வை மட்டுமே மாணவர்கள் எழுதியிருந்தால் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
 
தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை \(=\)
 
 
3. \(A\) மற்றும் \(B\) ஆகிய இரு கணங்கள் \(n(A – B) = 32 + x\), \(n(B – A) = 5x\) மற்றும் \(n(A \cap B) = x\), என அமைகின்றன. இத்தரவினை வென்படம் மூலம் குறிக்கவும். \(n(A) = n(B)\), எனில் \(x\) இன் மதிப்பைக் காண்க.
 
\(x =\)