PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் இசை அல்லது நாடகம் அல்லது இரண்டிலும்
பங்கேற்கிறார்கள். \(25\) மாணவர்கள் இசையிலும், \(30\) மாணவர்கள் நாடகத்திலும் மற்றும் \(8\) மாணவர்கள் இசை மற்றும், நாடகம் இரண்டிலும் பங்கேற்கிறார்கள் எனில்
(i) இசையில் மட்டும் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை.
(ii) நாடகத்தில் மட்டும் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை.
(iii) வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்.
2. ஒரு கணித வகுப்பில், \(20\) குழந்தைகள் அளவுகோலையும், \(17\) குழந்தைகள் எழுதுகோலையும்,
\(5\) குழந்தைகள் இரண்டையும் எடுத்துவர மறந்து விட்டார்கள் எனில் எத்தனை குழந்தைகள்,
(i) எழுதுகோலை மட்டும் எடுத்து வர மறந்தவர்களின்
எண்ணிக்கை.
(ii) அளவுகோலை மட்டும் எடுத்து வர மறந்தவர்களின்
எண்ணிக்கை.
(iii) வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
3. ஒரு கிராமத்திலுள்ள \(100\) குடும்பங்களில், \(65\) குடும்பத்தினர் தமிழ்ச் செய்தித்தாளையும்,
\(55\) குடும்பத்தினர் ஆங்கிலச் செய்தித்தாளையும் வாங்குகிறார்கள் எனில்,
(i) தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் இரண்டையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை.
(ii) தமிழ் செய்தித்தாள் மட்டும்
வாங்குபவர்களின் எண்ணிக்கை.
(iii) ஆங்கில செய்தித்தாள் மட்டும் வாங்குபவர்களின் எண்ணிக்கையைக் காண்க.