PDF chapter test TRY NOW

நினைவு கூர்தல் : (சேர்ப்பு கணம் மற்றும் வெட்டு கணம்)
 
சேர்ப்பு கணம்:
இரு கணங்கள் Aமற்றும் Bஇன் சேர்ப்பு கணம் என்பது, கணங்கள் Aஅல்லது B அல்லது
இரண்டிலும்  உள்ள  உறுப்புகளைக் கொண்ட கணம் ஆகும். இதை A\cup B எனக் குறிப்பிடலாம் .
 A∪B = \{x :x A அல்லது xB \}
வெட்டு கணம் :
இரு கணங்கள் Aமற்றும்Bஇன் வெட்டு கணம் என்பது, கணங்கள் A மற்றும்  B யின்  பொது உறுப்புகளைக் கொண்ட கணமாகும். இதை A∩Bஎனக் குறிப்பிடலாம்.
A∩B = \{ x:x A மற்றும் x B \}
இரு கணங்களின் சேர்ப்புக்கான பரிமாற்றுப் பண்பு: 
இரு கணங்களின்  சேர்ப்பானது ,அவற்றின் இடங்களை மாற்றினாலும் மாறாது.
A\cup B = B \cup A
எடுத்துக்காட்டாக,
 
A = \{2, 3, 5, 7\} மற்றும் B = \{4, 6, 8, 10\}
 
A \cup B = \{2, 3, 5, 7\} \cup \{4, 6, 8, 10\}
 
A \cup B = \{2, 3, 4, 5, 6, 7, 8, 10\}
 
B \cup A = \{4, 6, 8, 10\} \cup \{2, 3, 5, 7\}
 
B \cup A = \{2, 3, 4, 5, 6, 7, 8, 10\}
 
மேற்கண்ட கூற்றில் இருந்து,
 
A \cup B = B \cup A.
 
இரு கணங்களின் வெட்டிற்கான பரிமாற்றுப் பண்பு:
இரு கணங்களின் வெட்டனாது ,அவற்றின் இடங்களை மாற்றினாலும் மாறாது.
A\cap B = B \cap A
எடுத்துக்காட்டாக,
 
 A = \{3, 5, 8, 9, 10\} மற்றும்  B = \{4, 5, 7, 10\}
 
A \cap B = \{3, 5, 8, 9, 10\} \cap \{4, 5, 7, 10\}
 
A \cap B = \{5, 10\}
 
B \cap A = \{4, 5, 7, 10\} \cap \{3, 5, 8, 9, 10\}
 
B \cap A = \{5, 10\}
 
மேற்கண்ட கூற்றில் இருந்து,
 
A \cap B = B \cap A
Important!
இரு கணங்களின் மதிப்பானது அவற்றின் இடங்களை மாற்றினாலும் மாறாது. இதுவே பரிமாற்றுப்பண்பு ஆகும்.