PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(200\)மக்கள் கொண்ட கணக்கெடுப்பில் , \(125\) நபர்கள் தொலைக்காட்சியையும் , \(120\) நபர்கள் வாணொளியையும் மற்றும் \(135\) நபர்கள் கைப்பேசியையும் பயன்படுத்துகிறார்கள் .\(70\) நபர்கள் தொலைக்காட்சி மற்றும் வாணொளி இரண்டையும் பயன்படுத்துகின்றனர் , \(85\) நபர்கள் வாணொளி மற்றும் கைப்பேசி இரண்டையும் பயன்படுத்துகின்றனர் , \(75\) நபர்கள் தொலைக்காட்சி மற்றும் கைப்பேசி  இரண்டையும் பயன்படுத்துகின்றனர்  , மற்றும்  \(50\) நபர்கள் மூன்றையும் பயன்படுத்துகின்றனர்  . கீழ்க்கண்டவற்றை வென்படம் மூலம் காண்க.  
(i) தொலைக்காட்சி மற்றும் வாணொளியைப் பயன்படுத்தி கைபேசியைப் பயன்படுத்தாத நபர்களின் எண்ணிக்கையைக் காண்க ?
  
(ii) வாணொளி மற்றும் கைப்பேசியைப் பயன்படுத்தி தொலைக்காட்சியைப் பயன்படுத்தாத நபர்களின் எண்ணிக்கையைக் காண்க ?
  
(iii) தொலைக்காட்சி மற்றும் கைபேசியைப் பயன்படுத்தி வாணொளியைப் பயன்படுத்தாத நபர்களின் எண்ணிக்கையைக் காண்க ?
  
(iv) தொலைக்காட்சியை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையைக் காண்க ?
  
(v) வாணொளியை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையைக் காண்க  ?
  
(vi) கைபேசியை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையைக் காண்க ?
 
விடை :
 
\(A\), \(B\) மற்றும் \(C\) என்ற கணங்கள் தொலைக்காட்சி, வாணொளி மற்றும் கைப்பேசியைப் பயன்படுத்தும் நபர்கள் ஆகும் .   
மொத்த நபர்களின் எண்ணிக்கை \(= n(U) = 200\)
 
தொலைக்காட்சியை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= n(A) = 125\)
 
 வாணொளியைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= n(B) = 120\)
 
கைபேசியைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= n(C) = 135\)
 
தொலைக்காட்சி மற்றும் வாணொளியைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= n(A \cap B) = 70\)
 
வாணொளி மற்றும் கைப்பேசி பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= n(B \cap C) = 85\)
 
தொலைக்காட்சி மற்றும் கைப்பேசி பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= n(A \cap C) = 75\)
 
மூன்றையும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= n(A \cap B \cap C) = 50\)
 
Cardinality_2.svg
 
வென்படத்தில் இருந்து :
 
(i) தொலைக்காட்சி மற்றும் வாணொளியைப் பயன்படுத்தி கைபேசியைப் பயன்படுத்தாத நபர்களின் எண்ணிக்கை \(= 20\)
 
(ii) வாணொளி மற்றும் கைப்பேசியைப் பயன்படுத்தி தொலைக்காட்சியைப் பயன்படுத்தாத நபர்களின் எண்ணிக்கை \(= 35\)
 
(iii) தொலைக்காட்சி மற்றும் கைபேசியைப் பயன்படுத்தி வாணொளியைப் பயன்படுத்தாத நபர்களின் எண்ணிக்கை \(= 25\)
 
(iv) தொலைக்காட்சியை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= 30\)
 
(v) வாணொளியை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= 15\)
 
(vi) கைபேசியை மட்டும் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை \(= 25\)