PDF chapter test TRY NOW

காரணிப்படுத்துதல்:
 
இது, பெருக்களின் திருப்புகைச் செயல்பாடு ஆகும்.
Example:
x+1 மற்றும் x+2 என்ற காரணிகளை பெருக்க இருபடிக் கோவை கிடைக்கும்.
 
அதாவது, x+1 \cdot x+2 = x^2 + x + 2x + 2
 
= x^2 + 3x + 2
 
x^2 + 3x + 2 இன் காரணிகள்  x+1 மற்றும் x+2.
காரணிப்படுத்துதலின் வகைகள்:
காரணிப்படுத்துதலில் இரு வழிமுறைகள் உள்ளன
  • பொதுவான காரணிமுறை
Example:
காரணிப்படுத்துக: ax^2 + bx.
 
விடை:
 
x என்பது ax^2 + bx இன் பொதுவான காரணி ஆகும்.
 
x ஐப் பொதுவாக எடுக்கக் கிடைப்பது ax^2 + bx.
 
ax^2 + bx = x(ax + b)
 
எனவே, தேவையான காரணிகள் ax^2 + bx, x மற்றும் ax + b.
  • குழுவாகப் பிரித்தல்
Example:
காரணிப்படுத்துக: ax + a + bx + b.
 
விடை:
 
ax + c + bx + b என்பதைக் குழுவாக எழுதக் கிடைப்பது,
 
ax + a + bx + b = (ax + a) + (bx + b)
 
= a(x + 1) + b(x + 1)
 
பொதுவான காரணியை வெளியில் எடுக்கக் கிடைப்பது,
 
ax + a + bx + b = (x + 1)(a + b)
 
ax + a + bx + b இன் காரணிகள் (x + 1) மற்றும் (a + b).