PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇரண்டு கதிர்கள் அல்லது கோட்டுத்துண்டுகள் அவற்றின் தொடக்கப்புள்ளிகளில் சந்ததிக்கும் போது அப்புள்ளியில் கோணத்தை உருவாக்கும்.
இரண்டு கதிர்களை பக்கங்கள் எனவும், கதிர்கள் சந்ததிக்கும் புள்ளி முனை எனவும் கூறப்படும்.
வெவ்வேறு வகையான கோணங்கள் அவை குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம், நேரக்கோணம் மற்றும் பின்வளைக் கோணம் பற்றி விரிவாக காண்போம் :
குறுங்கோணம்: இரு கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது \(90°\) க்கு குறைவான பாகை கொண்டவை குறுங்கோணம்.
செங்கோணம்: இரு கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது சரியாக \(90°\) பாகை கொண்டவை செங்கோணம். இது சதுரத்தின் ஒரங்களை போன்று இருக்கும்.
விரிகோணம்: இரு கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது \(90°\)க்கு அதிகமான பாகை கொண்டவை விரிகோணம்.
நேர்க்கோணம்: இரு கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது சரியாக \(180°\) பாகையாக இருந்தால் அது நேர்க்கோணம் ஆகும்.
பின்வளை கோணம்: \(180°\)க்கும் \(360°\)க்கும் இடைப்பட்ட அளவுகளை கொண்ட கோணம்
பின்வளை கோணம் அல்லது மடக்கு கோணம்.