PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவட்டம்:
வட்டம் என்பது ஒரு தளத்திலுள்ள நிலையான புள்ளியில் இருந்து சம தொலைவில் நகரும் புள்ளியின் நியமப்பாதை ஆகும்.
வட்டத்தின் பகுதிகள் :
மையம்:
வட்டத்தின் நடுவே உள்ள நிலையான புள்ளியே வட்ட மையம் எனப்படும்.
ஆரம்:
வட்டத்தின் மேல் ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்து வட்ட மையத்திற்கு இடையே உள்ள தூரத்தைஆரம் எனப்படும்.
Important!
வட்டத்தில் உள்ள கோட்டுப்பகுதியானது மையத்தின் வழி சென்றால் அவை ஆரம் ஆகும்.
ஒரு செகண்ட் என்பது ஒரு கோடு சரியாக இரண்டு புள்ளிகளில் வட்டத்தை வெட்டுகிறது.
நாண்:
ஒரு வலைவில் இரண்டு புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோடு.
விட்டம்:
வட்டத்தின் மேல் ஏதேனும் இரு புள்ளிகளை இணைக்கும் ஒரு கோட்டுத்துண்டு வட்ட மையம் வழியாக சென்றால் அதனை விட்டம் எனப்படும்.
Important!
விட்டத்தின் பண்புகள்:
- ஒரு கோட்டுத்தூண்டானது வட்டத்தினை இருசம கூரிடும்.
- இதுவே வட்டத்தின் பெரிய பரிதியாகும்.
- இது வட்டத்தின் சமச்சிர் கோடுகள் ஆகும்.
- இது ஆரத்தின் இரு மடங்காகும்.
சுற்றளவு:
ஒரு வட்டத்தின் எல்லைக் கோடு அவ்வட்டத்தின் சுற்றளவு ஆகும்.
பரிதி:
சுற்றளவின் ஏதேனும் ஒரு பகுதியே அவ்வட்டத்தின் பரிதி ஆகும். "" எனக் குறிப்பிடப்படும்.
இங்கு, நீளம் குறைந்த பரிதி (மஞ்சள்) என்பது சிறிய பரிதியாகும் மற்றும் நீளமான பரிதி(கருப்பு) என்பது பெரிய பரிதியாகும்.
கோட்டுத்துண்டு:
நாண் மற்றும் பரிதி சேர்ந்து அடைப்படும் பகுதியே கோட்டுத்துண்டு எனப்படும்.
Important!
நாண் மற்றும் சிறிய பரிதி சேர்ந்து அடைப்படும் பகுதியே சிறிய கோட்டுத்துண்டாகும், மற்றும் நாண் மற்றும் பெரிய பரிதி சேர்ந்து அடைப்படும் பகுதியே பெரிய கோட்டுத்துண்டாகும்.
வட்ட கோணப்பகுதி:
ஒரு வட்டத்தின் இரண்டு ஆரங்களாலும், அந்த ஆரங்களால் வட்ட பிரிதியில் வெட்டப்படும் வில்லாலும் அடைப்படும் பகுதியே வட்டக்கோண பகுதியாகும்.
Important!
ஒரு வட்டத்தின் இரண்டு ஆரங்களாலும், மற்றும் சிறிய வட்ட பிரிதியில் வெட்டப்படும் வில்லாலும் அடைப்படும் பகுதியே சிறிய வட்டக்கோண பகுதியாகும் மற்றும் இரண்டு ஆரங்களாலும், பெரிய வட்ட பிரிதியில் வெட்டப்படும் வில்லாலும் அடைப்படும் பகுதியே பெரிய வட்டக்கோண பகுதியாகும்.
பொதுமைய வட்டங்கள் :
ஒரே மையத்தையும் வெவ்வேறு ஆரங்களையும் உடைய வட்டங்கள் பொது மைய வட்டங்கள் எனப்படும்.
Example:
நீர் அலைகள்.
சர்வசம வட்டங்கள்:
இரண்டு வட்டங்கள் சர்வசமம் எனில், ஒன்று மற்றொன்றின் நகலாக இருக்கும் அல்லது ஒன்றுபோல் இருக்கும். அதாவது, அவை ஒரே அளவுடையவை.
Example:
மிதிவண்டியின் இரு சக்கரங்கள்.
வட்டத்தைப் பொறுத்து ஒரு புள்ளி அமையும் நிலை:
ஒரு தளத்தில் உள்ள ஒரு வட்டத்தை எடுத்துக்கொள்க:
- வட்ட மையத்திலிருந்து புள்ளிக்கு உள்ள தூரம் சமம் எனில், புள்ளியானது வட்டத்தின் மேல் உள்ளது.
- வட்ட மையத்திலிருந்து புள்ளிக்கு உள்ள தூரம் குறைவு எனில், புள்ளியானது வட்டத்தின் உள்ளே உள்ளது.
- வட்ட மையத்திலிருந்து புள்ளிக்கு உள்ள தூரம் அதிகம் எனில், புள்ளியானது வட்டத்தின் வெளியே உள்ளது.
ஒரு தளத்தில் உள்ள வட்டம் ஆனது மூன்று வெவ்வேறு நிலைகளை கொண்டுள்ளது.
Important!
ஒரு வட்டத்தின் மையம் அவ்வட்டத்தின் உள்ளேயே இருக்கும்.
Reference:
https://pixy.org/5939397/
https://pixy.org/4801720/