PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநிகழ்ச்சிகளின் வகைகள் பற்றி காண்போம்.
1. சமவாய்ப்பு நிகழ்ச்சி: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளின் நிகழ்தகவு சமம் எனில், அவை சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் ஆகும்.
Example:
நாணயத்தை சுண்டுதல் எனும் நிகழ்ச்சியை காண்போம்.
கூறுவெளி, \(S = \{H, T\}\)
தலை பெறுவதற்கான நிகழ்தகவு, \(P(H) = \frac{1}{2}\)
பூ பெறுவதற்கான நிகழ்தகவு, \(P(T) = \frac{1}{2}\)
\(P(H) = P(T) = \frac{1}{2}\)
எனவே, நிகழ்ச்சிகள் \(P(H)\) மற்றும் \(P(T)\) என்பன சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் ஆகும்.
2.உறுதியான நிகழ்ச்சி: உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவு \(1\).
Example:
ஒரு பகடையை உருட்டும் போது \(7\) யை விட குறைவான எண்ணை பெறுதல் என்பது உறுதியான நிகழ்ச்சி.
3.இயலா நிகழ்ச்சி: இயலா நிகழ்ச்சியின் நிகழ்தகவு \(0\).
Example:
ஒரு பகடையை உருட்டும் போது \(7\) யை விட அதிகமான எண்ணை பெறுதல் என்பது இயலா நிகழ்ச்சி.
4.ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்: இரு நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடைபெறாது எனில் அந்நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் .
Example:
ஒரு நாணயத்தை சுண்டும் போது தலை அல்லது பூ மட்டுமே கிடைக்கும்.
5.நிரப்பு நிகழ்ச்சிகள்: நிகழ்ச்சி \(E\), நிகழ்ச்சியின் முடிவு \(A\). நிகழ்ச்சியின் முடிவை தவிர்த்து மற்றவை \(A'\). \(A\) யின் நிரப்பு நிகழ்ச்சி \(A'\).
\(S\) என்பது கூறுவெளி மற்றும் \(A\) என்பது சாதகமான முடிவுகளின் நிகழ்ச்சி, \(A\)' யின் நிரப்பு நிகழ்ச்சி \(S - A\).
Example:
பகடையை உருட்டும் போது.
கூறுவெளி, \(S = \{1, 2, 3, 4, 5, 6\}\)
நிகழ்ச்சி \(A\) என்பது சாதகமான முடிவுகளின் கணம் \(\{1, 2, 3\}\).
எனவே, நிரப்பு நிகழ்ச்சி \(A'\) \(= S - A\)
\(= \{1, 2, 3, 4, 5, 6\} - \{1, 2, 3\}\)
\(=\) \(\{4, 5, 6\}\).