PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் அறிவோம் பாலுனின் கொள்அளவிற்கு மீறி காற்றிணை உள் செலுத்தினால் அது வெடிக்கிறது.
 
இது போன்ற சோதனைகள் உறுதியான சோதனைகள் ஆகும். வேறுவார்த்தைகளில், இது போன்ற சோதனைகளின் முடிவுகளை சோதனைக்கு முன்பே அறியலாம்.
ஒரு நாணயத்தை சுண்டுவதற்கான நிகழ்தகவு என்ன ?
 
ஒரு நாணயத்தின் இரு முகங்கள் : தலை மற்றும் பூ.
 
ஒரு நாணயத்தை சுண்டும் போது வரையறுக்கப்பட்ட முடிவினை பெற இயலாது.
 
சோதனையின் முடிவில் தான் முடிவினை அறிய இயலும்.
 
இதுபோன்ற சோதனைகள் சமவாய்ப்புச் சோதனைகள் ஆகும்.
 
சமவாய்ப்புச் சோதனைகளில் உள்ள வார்த்தைகளைப் பற்றி காண்போம்.
முக்கியமான முடிவுகள்
1. முயற்சி: முயற்சி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளைத் தரக்கூடிய செயல் ஆகும்.
Example:
ஒரு சமாவாய்ப்பு சோதனையில் நாணயத்தை \(10\) முறை சுண்டினார்கள் , எனில் \(10\) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
 
2. விளைவு: ஒரு முயற்சியின் முடிவு விளைவு என அழைக்கப்படுகிறது.
Example:
நாணயத்தைச் சுண்டும்போது தலை கிடைப்பது விளைவு ஆகும்.
 
3. கூறுபுள்ளி:ஒரு சமவாய்ப்புச்சோதனையின்ஒவ்வொருவிளைவும் கூறுபுள்ளி என அழைக்கப்படுகிறது. .
Example:
a. நாணயத்தைச் சுண்டும்போது கிடைக்கும் தலை மற்றும் பூ என்பன கூறுபுள்ளிகள்.
 
b. பகடையை உருட்டும் போது வரும் கூறுபுள்ளிகள் \(1\), \(2\), \(3\), \(4\), \(5\) மற்றும் \(6\).
4. கூறுவெளி: ஒரு சமவாய்ப்புச் சோதனையின் வாய்ப்புள்ள எல்லா விளைவுகளின் (அல்லது கூறு
புள்ளிகளின்) கணம் கூறுவெளி என அழைக்கப்படுகிறது. இது \(S\) ஆங்கில எழுத்தால்
குறிக்கப்படுகிறது. இதிலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை \(n(s)\) ஆகும்.
Example:
a. ஒரு நாணயத்தை ஒரு முறை சுண்டும்போது கிடைக்கும் கூறுபுள்ளிகளின் கணம்:
 
\(S = \{H, T\}\)
 
\(n(S) = 2\)
 
b. ஒரு பகடையை உருட்டும் போது கிடைக்கும் கூறுபுள்ளிகளின் கணம்:
 
\(S = \{1, 2, 3, 4, 5, 6\}\)
 
\(n(S) = 6\)
5. நிகழ்ச்சி: கூறுவெளியின் எந்தவொரு உட்கணமும் நிகழ்ச்சி என
அழைக்கப்படுகிறது. ஆகவே ஒரு நிகழ்ச்சி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளைக் கொண்டிருக்கும்.
Example:
ஒரு பகடையை உருட்டுவதற்கான கூறுவெளி, \(S = \{1, 2, 3, 4, 5, 6\}\)
 
\(3\) இன் மடங்கு கிடைப்பதற்கான நிகழ்ச்சி \(\{3, 6\}\).