PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சீட்டு விளையாடுதல்:
ஒரு சீட்டுகட்டில் மொத்தம் \(52\) சீட்டுகள் இருக்கும்.
 
\(52\) சீட்டுகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அவை டைமண்ட்,ஹார்ட் , ஸ்படே மற்றும் கெளவர்.
cards-159600_1280.png
 
ஒவ்வொரு வகையிலும் \(13\) சீட்டுக்கள் உள்ளன.
 
ஸ்படில் \(13\) சீட்டு \(+\) கெளவர் இல் \(13\) சீட்டு \(+\) ஹார்ட் இல் \(13\) சீட்டு \(+\) டைமன்ட் இல் \(13\) சீட்டு \(=\) \(52\) சீட்டுகள்.
 
டைமன்ட் சீட்டுகள் பற்றி காண்போம்.
 
shutterstock_111600116.jpg
 
கற்பனையாக \(13\) சீட்டுகள் தலைகீழாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தடவை டைமன்ட் \(5\) எடுப்பதற்கான வாய்ப்புகள் எத்தனை ?
மொத்தம் \(13\) சீட்டுகள் உள்ளன . இதில் இருந்து ஒரு சீட்டினை எடுக்க வேண்டும்.
 
டைமன்ட் \(5\) எடுப்பதற்கான வாய்ப்புகள் \(=\) \(\frac{1}{13}\)
பகடை:
பகடை என்பது ஒரு விளையாட்டு. இதில் \(6\) முகங்கள், மற்றும் எண்கள் \(1\) இல் இருந்து \(6\) வரை உள்ள முகங்கள்.
 
dice-25637_1280.png
 
பகடையை ஒரு முறை உருட்டினால் உண்டாகும் வாய்ப்புகள் என்ன ?
 
வாய்ப்புகள்  \(\{\)\(1\), \(2\), \(3\), \(4\), \(5\), \(6\)\(\}\).
 
முதல் முறை \(6\) வருவதற்கான வாய்ப்புகள் எத்தனை?
 
மொத்த வாய்ப்புகள் \(6\) , ஒரே ஒரு  \(1\) சாதகமான வாய்ப்பு.
 
எனவே, முதல் முறை \(6\) வருவதற்கான வாய்ப்புகள் \(=\) \(\frac{1}{6}\)