PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் எனும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. இதனைத் தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் எனும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார்.
தமிழ்மொழியில் முதன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ஐம்பூதங்கள், ஓரறிவு முதல் ஆறறிவு உயிர் வகைப் பாகுபாடு பற்றித் தொல்காப்பியர் பதிவு செய்துள்ளார்.
தொல்காப்பியர் கூறிய அறு வகை உயிர்ப் பாகுபாடு:
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் மரபியல் என்னும் இயலில் மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளால் நுகரப்படும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி ஆகிய புலன்களுடன் மன உணர்வையும் இணைத்து, உயிரினங்களை அறு வகைகளாகப் பிரிக்கிறார் தொல்காப்பியர்.
நூற்பா:
“ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே,
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே!
நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே” (571)
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே!
நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே” (571)
ஓரறிவு உயிா்:
- ஓரறிவு - உடலை மட்டும் கொண்டிருக்கும் உயிாினம்.
- தன் உடலால் தொடுதல் உணா்ச்சியை மட்டுமே உணா்தல்.
- முதல் அறிவான ஓா் அறிவை மட்டுமே கொண்டிருப்பவை தாவரங்கள்.
- சான்று : புல், மரம், கொடி, செடி.
“புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உள வே அக்கி ளைப் பிறப் பே ” (572) |
ஈரறிவு உயிா்:
- இரண்டாவது அறிவு - உடல், வாய் ஆகிய இரண்டை மட்டும் கொண்டிருக்கும் உயிாினம்.
- உடலால் தொடுதல் உணா்வையும் நாக்கினால் சுவைத்தல் உணா்வையும் கொண்டிருக்கும்.
- சான்று : நத்தை, சங்கு, அலகு, நொள்ளை, இப்பி, கிளிஞ்சல், ஏரல்.
“நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (573) |
மூவறிவு உயிா்:
- மூவறிவு - உடல், நாக்கு (வாய்), மூக்கு ஆகிய மூன்றை மட்டும் கொண்டிருக்கும் உயிாினம்.
- தொடு உணா்ச்சி, நா உணா்ச்சி, மூக்குணா்ச்சி மூன்றும் கொண்டன.
- இவை ஊா்வன வகையைச் சாா்ந்தது.
- சான்று : கரையான் (சிதல்), எறும்பு, அட்டை.
“சிதலும் எறும்பும் மூவறி வின வே பிறவும் உள வே அக்கி ளைப் பிறப் பே” (574) |
நாலறிவு உயிா்:
- நான்கறிவு - உடல், வாய், மூக்கு, கண் இவற்றை பெற்றிருக்கும் உயிாினம்.
- இந்நான்கின் மூலமாக உணா்வுகளை உணருபவை பூச்சியினங்கள்.
- சான்று : நண்டு, தும்பி, வண்டு, தேனீ, குழவி, ஞிமிறு.
“நண்டுத் தும்பியும் நான்கறி வின வே பிறவும் உள வே அக்கி ளைப் பிறப் பே”(575) |
என்று நாலறிவு உயிா்களைப் பற்றித் தொல்காப்பியா் குறிப்பிடுகின்றாா். வண்டு, தும்பி, இவற்றின் இனங்கள், தொடு உணா்வு, மூக்குணா்வு, இவற்றோடு கட்புலன் உணா்வும் பெற்றுத் திகழ்வன.
ஐந்தறிவு உயிா்:
- ஐந்தறிவு - உடல், வாய், மூக்கு, கண், காது ஆகியவற்றைக் கொண்டிருக்கும் உயிாினம்.
- ஐந்து உணா்வுகளைக் கொண்டிருப்பதால் ஐந்தறிவு உயிாினம்.
- சான்று : பறவைகள், விலங்குகள்.
“மாவும் புள்ளும் ஐயறி வின வே பிறவும் உள வே அக்கி ளைப் பிறப் பே” (576) |
ஆறறிவு உயிா் :
- ஆறறிவு - மெய், வாய், கண், செவி மற்றும் சிந்தனை கொண்டு செயல்படும் மனித உயிாினம்.
- பகுத்தறிவு கொண்டவா்கள் மக்கள் மட்டும்தான்.
- ஆதலால் தான் மனிதா்களுக்கு மட்டுமே ஆறறிவு.
- சான்று : மக்கள், தேவா், அசுரா், இயக்கா்.
“மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (577) |
பெட்டிச் செய்திகள்:
தொல்காப்பியம் நூற்குறிப்பு:
நூல் பெயர்: தொல்காப்பியம் ஆசிரியர் பெயர்: தொல்காப்பியர் காலம்: கி.மு 300 இலக்கண நூல்கள்: 1) எழுத்ததிகாரம், 2) சொல்லதிகாரம், 3) பொருளதிகாரம். தொல்காப்பியம் என்ற தமிழிலக்கண நூலினமைப்பு (கி.மு. 300) |
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு(2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம்.
மொழி - கனவுபலித்தது (ப.எண்.15-17) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.
மொழி - கனவுபலித்தது (ப.எண்.15-17) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.
https://commons.wikimedia.org/wiki/File:Palm_leaf_-_Tamil_Tholkaapiam.JPG