PDF chapter test TRY NOW

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
      கோதையரே கும்மி கொட்டுங்கடி!
நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
      எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
Kummy.png
 
        கோதையா் என்றால் பெண்கள் என்று பொருள். இளம் பெண்களே நீங்கள் கும்மி கொட்டுங்கள். பெண்களே வட்டமாக கூடி நின்று கைகளைத் தட்டி கும்மி கொட்டுங்கள்.
 
 1.png
 
        நிலம் என்றால் நாம் வாழக்கூடிய நிலம் என்று பொருள். நாம் வாழக்கூடிய நிலமானது எட்டு திசைகளைக் கொண்டதாக இருக்கிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு இப்படியாக எட்டு திசைகளிலும் செம்மையான மொழியான தமிழ் பரவிடும்படி கும்மி கொட்டுங்கள்.