PDF chapter test TRY NOW
ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம்!
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம்!
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
அழியாமலே நிலை நின்றதுவாம்!
ஊழி என்றால் நீண்டதொரு காலப்பகுதி என்று பொருள். தமிழ் மொழியானது பலநூறு ஆண்டுகளைக் கடந்து இருக்கிற மொழியாகும். கி.மு. மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான தொல்காப்பியம், கி.மு. ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான பாிபாடல் மற்றும் கி.மு. ஏழாயிரம் ஆண்டுகள் பழமையான அகத்தியம் ஆகிய நூல்கள் தமிழ் மொழியில் இருந்ததாக சொல்லப்படுகிறது, இப்படியாக, காலங்கள் பல கடந்து தமிழ் மொழி இருப்பதாக சொல்லப்படுகிறது, அறிவு ஊற்றான நூல்கள் பல கொண்டதாக தமிழ்மொழி இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண, இலக்கியங்கள் உடையதாக தமிழ்மொழி விளங்குகிறது. சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை ஏராளமான இலக்கியங்களை கொண்டதாக தமிழ் மொழி விளங்குகிறது.
ஆழி என்றால் கடல் கோல் என்று பொருள். சுனாமி போல கடல் கோலாலும், கால மாற்றத்தாலும் முற்றிலுமாக அழிந்து விடாமல் நிலையாக நிற்கும் மொழியாக தமிழ் மொழி உள்ளது. தமிழ் என்பது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடிய மொழியாக இருக்கிறது. தமிழை முச்சங்கம் வைத்து வளா்த்தாா்கள் என்று சொல்வதுண்டு. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய மூன்று சங்கங்களை வைத்து தமிழை வளா்த்தாா்கள். முதற்சங்கம் 4440 வருடம் இருந்தது. இடைச்சங்கம் 3700 வருடம் இருந்தது. கடைச்சங்கம் 1800 வருடம் இருந்தது. முதற் சங்க நூல்களும், இடைச்சங்க நூல்களும் நமக்கு கிடைக்கப்பெறா விட்டாலும், கடைச்சங்க நூலாகிய எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் நமக்கு கிடைத்துள்ளது. இப்படி, ஆழி பெருக்கினாலும், கால மாற்றத்தாலும் முழுமையாக அழியாத தமிழ் மொழியை வாழ்த்தி கும்மி அடி.
Reference:
https://www.crushpixel.com/stock-photo/stack-old-books-on-library-1957207.html
https://pixabay.com/photos/sea-wave-splash-big-wave-ocean-5499649/