PDF chapter test TRY NOW

bharathiyar.png
  
மகாகவி பாரதியார்:
  •  யாப்பு இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு எழுதப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.
  • இவ்வடிவத்தைத் தமிழ் மொழியில் அறிமுகம் செய்தார்.
  • ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’,
  • ‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப் பெற்றவர்
  • கவிஞர், கட்டுரையாளர், கேலிச்சித்திரம் – கருத்துப் படம் போன்றவற்றை உருவாக்கினார்.
  • பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டுப் பெற்றவர்.
  • 1882 திசம்பர் 11 : சின்னசாமி ஐயர், இலக்குமியம்மாள் இருவருக்கும் மகனாக எட்டையபுரத்தில் பிறந்தார். அன்புப் பெயர் - சுப்பையா, இளமைப் பெயர் – சுப்பிரமணியன்.
  • 1893: பதினொன்றாம் வயதில் எட்டையபுர மன்னர் சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாலகனின் கவித்திறனை வியந்து பாராட்டிப் புகழ்ந்து பாரதி என்னும் பட்டம் அளிக்கப்பட்டது.
  • 1897: செல்லம்மாளைத் திருமணம் செய்தார்.
  • 1902 : எட்டையபுர மன்னர் அழைப்புக்கு இணங்க அரசவைக் கவிஞரானார்.
  • 1904: மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியர் பணியாற்றினார். அன்பு, சுதேசமித்திரன் நாளிதழில் துணையாசிரியர் பணி புரிந்தார்.
  • 1905 – 1906: அரசியலில் பிரவேசித்து கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி யுடன் தொடர்பு கொண்டார்.
  • 1907: சூரத் மாநாட்டில் பங்கேற்றார். திலகர், அரவிந்தர், லாலாலஜபதிராய் அவர்களைச் சந்தித்தார்.
  • 1908 – 1910: இந்தியா பத்திரிக்கையைப் புதுச்சேரியில் நடத்தியபடியே வந்தார். ஆங்கிலேயர் இந்தியாவில் படிக்க தடை விதித்தனர். கனவு என்ற சுயசரிதை முதலிய கவிதைகள் அடங்கிய மாதா மணி வாசகம் நூல் வெளியிடப்பட்டது.
  • 1912: பகவத் கீதையைத் தமிழில் மொழிபெயர்த்தார். 
  • 1913 – 1914: தேசபக்திப் பாடல்களைக் கொண்ட மாதாமணி வாசகம் என்ற நூல் தென்னாப்பிரிக்காவில் பிரசுரமாயிற்று.
  • 1919: சென்னை வந்த மகாத்மாவை மகாகவி மாமேதை ராஜாஜி வீட்டில் சந்தித்தார்.
  • 1920: மீண்டும் மித்திரனில் உதவியாசிரியராகப் பணியேற்றார்.
  • 1921: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை பாரதியாரை வெறிகொண்டு தாக்கியது. பின், வயிற்றுக் கடுப்பு நோயால் பீடிக்கப்பட்டார்.
  • 1921: செப்டம்பர் 11 அன்று உயிர் பிரிந்தது.
Reference:
https://pixabay.com/illustrations/tamil-poet-cartoon-poet-3328004/
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். இயற்கை - காணிநிலம் (ப.எண். 29-31) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.