PDF chapter test TRY NOW

பாரதியின் கவிதைப் படைப்பு - காணி நிலம் முழுக் கவிதை :

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
          காணி நிலம் வேண்டும்; – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
        துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
      கட்டித் தரவேண்டும்; – அங்குக்
கேணி அருகினிலே– தென்னைமரம்
      கீற்று மிள நீரும்.
 
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
      பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே– நிலாவொளி
     முன்பு வர வேணும்; – அங்கு,
கத்துங் குயிலோசை– சற்றேவந்து
     காதில் படவேணும்; – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே– நன்றாயிளந்
     தென்றல்வர வேணும்.
 
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
       பத்தினிப் பெண்வேணும்; - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
       கொண்டுதர வேணும்; - அந்தக்
காட்டு வெளியினிலே, - அம்மா! நின்றன்
       காவலுற வேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
       பாலித்திட வேணும்.
 
கவிதை இசைப் பாடல் வடிவில் காணொளி இணைப்பு:
 
 
பெட்டிச் செய்திகள்:
 
பெண் தெய்வ வழிபாடு சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் காணப்படுகின்றது. பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை. பின்னாலும் அவ்வழக்கம் தொடர்ந்தது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியும் அதைப் பின்பற்றுகிறார்.  காளி மீது 28 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஒளிபடைத்த கண்களும் நெற்றியில் சிவந்த குங்குமமும் கொண்ட பாரதியின் தோற்றமே அவரைக் காளி பக்தனாகக் காட்டும். பராசக்தியை, சிவசக்தி, காளி, கோமதி, முத்துமாரி என்று பல பெயர்களில் வணங்குகிறார். பாரத நாட்டையே பாரத தேவியாகவும் சக்தியாகவும் காண்கிறார்.
Reference:
காணொளிச்சுருக்கம் :
https://youtu.be/YOpxXo6Yb6A
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். இயற்கை - காணிநிலம் (ப.எண். 29-31) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.