PDF chapter test TRY NOW

காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும் – அங்குத்

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் – அந்தக்

காணி நிலத்திடையே – ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் – அங்குக்

கேணி அருகினிலே– தென்னைமரம்

கீற்றும் இளநீரும்

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

பக்கத்திலே வேணும்

land.jpg
  • காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் கேட்கையில் இயற்கை எழில் சூழ்ந்த மாசு இல்லாத சுற்றுச் சூழலைச் சாத்தியமாக்க எண்ணுகிறார்.
house.jpg
  • காணி அளவு கொண்ட நிலத்தில், பெரிய மாளிகை ஒன்று கட்ட வேண்டும்.
Pillar.jpg
  • அம்மாளிகையில் மிகமிக அழகான தூண்கள் இருக்கும்படியாகவும், தூய்மையான வெண்மை நிறத்துடைய பெரிய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
கிணறு.jpg
  • அங்கு நற்சுவையான நீரையுடைய கிணறு அமைய வேண்டும்.
winds.jpg coconut-palm-.jpg
  • அம்மாளிகையின் அருகில் குளிர்ச்சியான தென்றல் காற்றை வீசக்கூடிய மரங்களையும் மற்றும் நல்ல இளநீரையும் கீற்றுகளையும் தரும் பத்து பன்னிரண்டு தென்னை மரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
பெட்டிச் செய்திகள்:
  
  • பழந்தமிழர்கள் இயற்கை சார்ந்து தமது வாழ்வியலைக் கட்டமைத்தனர் என்பது நிதர்சனம்.
  • இயற்கை நில வளங்களை மையப்புள்ளியாகக் கொண்டு ஐவகையாகப் பகுத்தார்கள்.
  • மலையும் மலை சார்ந்த இடமும் - குறிஞ்சி
  • காடும் காடு சார்ந்த இடமும் – முல்லை
  • வயலும் வயல் சார்ந்த இடமும் – மருதம்
  • கடலும் கடல் சார்ந்த இடமும் – நெய்தல்
  • மணலும் மணல் சார்ந்த இடமும் – பாலை
            என்று நிலத்தை ஐவகையாகப் பகுத்து வாழ்ந்து வந்தார்கள்
  • 1 ச.மீ (Sq. Meter)- 10 .764 ச அடி (Sq. Ft)
  • 2400 ச.அடி (Sq. Ft) – 1 மனை (Flat)
  • 24 மனை (Flat)- 1 காணி (Land)
Reference:
https://www.pexels.com/photo/landscape-nature-sky-clouds-102728/
https://commons.wikimedia.org/wiki/File:A_aesthetic_building_with_Tamil_traditional_touch.JPG
https://commons.wikimedia.org/wiki/File:Traditional_Well-Kerala.JPG
https://www.flickr.com/photos/shebalso/4270243814
https://pixabay.com/photos/coconut-palm-dharwad-india-172530/
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். இயற்கை - காணிநிலம் (ப.எண். 29-31) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.