PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நல்ல
முத்துச் சுடர்போலே– நிலாவொளி
முன்பு வர வேணும்; – அங்கு,
கத்துங் குயிலோசை– சற்றேவந்து
காதில் படவேணும்; – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே– நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
moon.jpg
  • பாரதியார் காணி நிலம் வேண்டுகையில், நல்ல முத்துச் சுடர்போலே – நிலாவொளி முன்பு வரவேணும் என்கிறார்.
காற்று.jpg
  • பாரதியார் தமது இல்லத்திற்கு இளந்தென்றல் வரவேண்டும் என்கிறார்.
cuckoo.jpg
  • செவிகளுக்கு இனிமையான குயில்களின் குரலோசைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
happiness.jpg
  • மனம் மகிழ்ச்சியில் மூழ்க வேண்டும்.
பராசக்தி.jpg
  • குளிர்ந்த இளந்தென்றல் வீச வேண்டும் என்று பராசக்தியிடம் கேட்கிறார்.
  • இயற்கையை வழிபட்ட பாரதி பராசக்தி, (சக்தி, சிவசக்தி, காளி, தேச முத்துமாரி, கோமதி) கலைமகள், திருமகள், வள்ளி, விநாயகர், கண்ணன், முதலிய தெய்வங்களைக் குறித்துப் பாடியிருக்கிறார்
பெட்டிச் செய்திகள்:
 
எந்தப் பொருளானாலும் தானாக உருவாக முடியாது. அதை உருவாக்கும் காரணகர்த்தா, படைப்பாளி உண்டு. அவர் எல்லாவற்றையும் கடந்தவர், அவரையே கடவுள் என மக்கள் நம்புகின்றனர். ஒரு படைப்பாளிக்கு ஆற்றல் தேவை. அந்த ஆற்றலே சக்தி. அது செயல்படாத நிலை சக்தியாக (Potential energy) அல்லது செயல்படும் இயங்கு சக்தியாக (Kinetic energy) எல்லாப் பொருளிலும் நிறைந்து காணப்படுகிறது. அந்த ஆற்றலைத் தெய்வமாக மதிக்கிறார் பாரதி. இந்த உலகு அனைத்தையும் தோற்றுவிப்பவள் அன்னை அல்லவா? ஆகவே, உலகிலுள்ள தெய்வம் உட்பட அனைத்துப் பொருள்களும் காளியிடமிருந்து பிறப்பதாக எண்ணுகிறார். எல்லாம் அவளுடைய அம்சம் தானே! குழந்தை தனக்கு வேண்டியதை யாரிடம் கேட்கும்? அன்னையிடம். எனவே, தம் பாவங்கள் போகத் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய விரும்பித் தம் உடல் உறுப்புகள் அனைத்தையும் சக்திக்கு அர்ப்பணம் செய்கிறார்.அவளைச் சரணடைந்தால் கவலை தீரும், துன்பம் நீங்கி இன்பம் பெருகும். சக்தியை வழிபடுங்கள். சொல், செயல், எண்ணம் இவை மூன்றும் சக்தியைப் பற்றியே இருக்க வேண்டும் என்று சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்னும் பாடலில் சக்தி தனக்கே உரிமையாக்கு என்று பாடுவதைக் காணலாம். (தரவு : தமிழ் இணையக் கல்விக் கழகம்)
Reference:
https://pixabay.com/illustrations/moon-full-moon-house-landscape-4113106/
https://unsplash.com/photos/awo3OXuSH4k
https://pixabay.com/photos/cuckoo-bird-pheasant-black-nature-3460630/
https://pixabay.com/photos/happiness-joy-fresh-air-liberty-1866081/
https://en.wikipedia.org/wiki/Mahadevi
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். இயற்கை - காணிநிலம் (ப.எண். 29-31) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.