PDF chapter test TRY NOW
பசுங்கணிகத்தில், குளோரோபில் எனப்படும் ஒரு வகை பச்சை நிற நிறமி உள்ளது. இந்நிறமி தாவரத்திற்குப் பச்சை நிறத்தை அளிக்கின்றன, பெரும்பாலும் இவை தாவரங்களின் இலைகளில் காணப்படுகின்றன. சூரிய ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்தி தாவரங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய பசுங்கணிகங்கள் உதவுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட உணவைச் சேமித்து வைத்து தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின் போது உபயோகித்துக் கொள்கின்றன.
பசுங்கணிகம், நீளமான உருண்டை வடிவ செல்களாலான ஓர் நுண்ணுறுப்பாகும். இவை \(2\) முதல் \(10\) மைக்ரோமீட்டர் விட்டம் மற்றும் \(1\) முதல் \(2\) மைக்ரோமீட்டர் தடிமன் கொண்டவை.
பசுங்கணிகத்தின் அமைப்பு
1. உறை:
நாம் ஏற்கெனவே கற்றுக் கொண்ட படி பசுங்கணிகம் இரட்டை சவ்வினால் சூழப் பட்ட ஓர் நுண்ணுறுப்பாகும். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் காணப்படும் சவ்வுகள் ஒரு இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ளன.
2. ஸ்ட்ரோமா:
பசுங்கணிகத்தின் உட்புற சவ்வில் மேட்ரிக்ஸ் எனப்படும் ஸ்ட்ரோமா என்ற பகுதி காணப்படுகின்றது. இதில் டிஎன்ஏ (DNA), 70S ரைபோசோம், நொதிகள் மற்றும் புரதத் தொகுப்புக்குத் தேவையான இதர மூலக்கூறுகளும் உள்ளது.
3. தைலக்காய்டு:
கிரேக்க மொழியில் தைலக்கோஸ் என்றால் பை என்று பொருள். பசுங்கணிகங்களின் உட்புற சவ்வான ஸ்ட்ரோமாவில் சிறிய இடைவெளிகளுடன் கூடிய ஒரு பைபோன்ற தட்டு வடிவமான அமைப்பு உள்ளது. இவை தான் தைலக்காய்டு என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் குளோரோபில் எனப்படும் பச்சை நிற நிறமிகள் உள்ளன. இவை ஒளிச்சேர்க்கைக்கான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்துவதால் இவை ஒளிச்சேர்கை நிறமி எனவும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளன.
4. கிரானா:
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கவனிக்கும் போது பல தட்டு வடிவ தைலக்காய்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக நாணயம் போல அடுக்கி வைக்கப் பட்டிருப்பதை நம்மால் காண இயல்கிறது. இந்த தைலகாய்டுகளின் அடுக்கு கிரானம் என்று அழைக்கப்படுகிறது. கிரானாக்கள் ஒவ்வொன்றும் ஸ்ட்ரோமா லேமல்லாவால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.
பசுங்கணிகத்தின் பணிகள்:
- ஒளிசேர்க்கை
- தரசம் சேமித்தல்
- கொழுப்பு அமில உற்பத்தி
- லிப்பிடுகள் சேமிப்பு
- பசுங்கணிகம் உருவாக்கம்