PDF chapter test TRY NOW

முந்தைய பகுதியில், விசையின் திருப்புத்திறன் செயல்படும் சில எடுத்துக்காட்டுகள் பற்றி அறிந்துகொண்டோம்.
 
இந்த பகுதியில், திருப்புத்திறன்களின் தத்துவம் (principle of moments) பற்றி படிப்போம்.
சமநிலையில் உள்ள பொருள் ஒன்றின் மீது சம மதிப்புள்ள அல்லது சம மதிப்பற்ற விசைகள் இணையாகவோ அல்லது எதிர் இணையாகவோ செயல்பட்டால், அப்பொருளின் மீது செயல்படும் மொத்த வலஞ்சுழி திருப்புத்திறனும், மொத்த இடஞ்சுழி திருப்புத்திறனும் சமமாக இருக்கும்.
அல்லது
பொருளானது சமநிலையில் உள்ள போது அதன் ஒரு புள்ளியின் மீது செயல்படும் அனைத்து விசைகளின் திருப்புத்திறன்களின் கூடுதல் சுழிக்கு சமமாகும்.
 
YCIND20220825_4327_Laws of motion_01.png

மேற்கண்ட படத்தில் சமநிலையில் உள்ள பொருள் ஒன்றில், ஆதார மையம் \(P\) ல் இருந்து \(d_1\) தொலைவில் இயங்கும் விசையான \(F_1\) இடப்பக்கச் சுழற்சியினையும், ஆதார மையம் \(P\) ல் இருந்து \(d_2\) தொலைவில் இயங்கும் விசையான \(F_2\) வலப்பக்கச் சுழற்சியினையும் ஏற்படுத்துகிறது.
 
விசையின் திருப்புத்திறன் \(\tau\) ஆனது,
 
\(\tau =\ F \times d\)
 
திருப்புத்திறன்களின் தத்துவத்தின் படி,
 
\(\text{வலஞ்சுழி திருப்புத்திறன்}\ =\ \text{இடஞ்சுழி திருப்புத்திறன்}\)
 
\(F_1 \times d_1\ =\ F_2 \times d_2\)