PDF chapter test TRY NOW

நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி:
ஒரு பொருளின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்தமாறுபாட்டுவீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது. எனவே இதை ‘விசையின் விதி’ என்றும் அழைக்கலாம்.
 
விசைக்கான சமன்பாட்டை கீழ்க் கண்டவாறு தருவிக்கலாம்.
 
\(m\) நிறை மதிப்புடைய பொருள் ஒன்று \(u\) என்ற ஆரம்ப திசைவேகத்தில் நேர்க்கோட்டு இயக்கத்தில் உள்ளதென கொள்வோம். \(t\) என்ற கால இடைவெளியில் \(F\) என்ற சமன் செயப்படாத புற விசையின் தாக்கத்தால், அதன் வேகம் \(v\) என்று மாற்றமடைகிறது.
 
பொருளின் ஆரம்ப உந்தம் \(P_i\ =\ mu\)
 
இறுதி உந்தம் \(P_f\ =\ mv\)
 
உந்தமாறுபாடு \(\Delta p\ =\ P_f\  –\  P_i\)
 
\(\Delta p\ =\ mv\ –\ mu\)
 
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி,
 
\(\text{விசை}\ (F)\ \propto  \frac{\text{உந்த மாற்றம்}}{\text{காலம்}}\)
 
\(F\ \propto \frac{(mv – mu)}{t}\)
 
\(F\ =\ K \times m \times \frac{(v- u)}{t}\)
 
\(K\) என்பது விகித மாறிலி;
 
\(K\ =\ 1\) (அனைத்து அலகு முறைகளிலும்)
 
எனவே,

\(F\ =\ \frac{(mv – mu)}{t}\)
 
\(\text{முடுக்கம்}\ =\ \frac{\text{திசைவேக மாற்றம்}}{\text{காலம்}}\)
 
\(a\ =\ \frac{ (v – u)}{t}\)
 
எனவே,
\(F\ =\ m \times a\)
 
\(\text{விசை}\ =\ \text{நிறை} \times \text{முடுக்கம்}\)