PDF chapter test TRY NOW
முந்தைய பகுதியில், விசையின் திருப்புத்திறன் மற்றும் இரட்டை பற்றி அறிந்துகொண்டோம்.
இந்த பகுதியில், விசையின் திருப்புத்திறன் செயல்படும் சில எடுத்துக்காட்டுகள் பற்றி படிப்போம்.
விசையின் திருப்புத்திறன் செயல்படும் எடுத்துக்காட்டுகள்:
1. பற்சக்கரங்கள் (Gears):
பற்சக்கரங்கள் வட்டப்பரப்பின் விளிம்புகளில் பல் போன்று மாற்றம் செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும்.
இயங்குகின்ற வாகனசக்கரங்களின் சுழற்சி வேகத்தை, பற்சக்கரங்கள் மூலம் திருப்புவிசையினை மாற்றுவதன் மூலம் மாற்றலாம். மேலும் பற்சக்கரங்கள் திறனை கடத்துவதற்கும் உதவுகின்றன.
இயங்குகின்ற வாகனசக்கரங்களின் சுழற்சி வேகத்தை, பற்சக்கரங்கள் மூலம் திருப்புவிசையினை மாற்றுவதன் மூலம் மாற்றலாம். மேலும் பற்சக்கரங்கள் திறனை கடத்துவதற்கும் உதவுகின்றன.
2. ஏற்றப்பலகை (seesaw play):
நீங்கள் ஏற்றப்பலகை விளையாட்டினை விளையாடி இருப்பீர்கள். அதில் அமரும் நபர்களின் எடையில் வித்தியாசம் இருப்பதால், எடை அதிகமான ஒருவர், மற்றொருவரை எளிதில் தூக்குகிறார். எடை அதிகமான நபர் பலகையின் ஆதாரப்புள்ளியினை நோக்கி நகரும் போது, விசை செயல்படும் தூரம் குறைகிறது. இதனால் திருப்புவிசையின் செயல்பாடு குறைகிறது. இது எடை குறைவான நபரானவர், எடை அதிகமான நபரை தூக்க வழி வகை செய்கிறது.
3. திருப்புச்சக்கரம் (steering wheel):
மிக வலுவானமகிழுந்து மற்றும் பார உந்துகளின் சக்கரங்களின் திசையினை, குறைவான திருப்பு விசை கொண்டு எளிதில் மாற்ற திருப்புச்சக்கரம் உதவுகிறது.
4. பாட்டில் மூடியைத் திறப்பது:
ஒரு பாட்டில் மூடியைத் திறக்கும் போது விசையின் திருப்புத்திறன் பயன்படுத்தப்படுகிறது.