PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முந்தைய பகுதியில், கணத்தாக்கு (Impulse) மற்றும் அதன் எடுத்துக்காட்டுகள் பற்றி அறிந்துகொண்டோம்.
 
இந்த பகுதியில், நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி பற்றி படிப்போம்.
 
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி:
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. எப்போதும் விசையும் எதிர்விசையும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
\(A\) என்ற ஒரு பொருள் \(B\) என்ற மற்றொரு பொருளின் மீது \(F_A\) விசையினை செலுத்துகிறது எனில், ‘\(B\)’ ஆனது தன் எதிர்விசை \(F_B\) யினை ‘\(A\)’ மீது செலுத்தும்.
 
இவற்றின் எண்மதிப்பு சமமாகும். ஆனால் அவை ஒன்றுக்கொன்று எதிர்திசையில் செயல்படும்.
 
\(F_A\ =\ – F_B\)
 
எடுத்துக்காட்டுகள்:
 
  • பறவைகள் தமது சிறகுகளின் விசை மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன. காற்றானது அவ்விசைக்கு சமமான விசையினை உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.
விசை - பறவைகள் தங்கள் சிறகுகளால் காற்றை கீழே தள்ளும்

எதிர் விசை - காற்று பறவையை மேல்நோக்கி தள்ளுகிறது
  • நீச்சல் வீரர் ஒருவர் நீரினை கையால் பின்நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே தள்ளுகிறது.
விசை - நீரினை கையால் பின்நோக்கி தள்ளுதல்
எதிர் விசை - நீரானது அந்நபரை முன்னோக்கித் தள்ளுகிறது
  • துப்பாக்கி சுடுதலில் குண்டு, விசையுடன் முன்னோக்கி செல்ல அதற்கு சமமான எதிர்விசையினால் குண்டு வெடித்தபின் துப்பாக்கி பின்னோக்கி நகர்கிறது.
விசை - குண்டு முன்னோக்கி நகர்வது
எதிர் விசை - துப்பாக்கி பின்னோக்கி நகர்வது