PDF chapter test TRY NOW

கணத்தாக்கு:
 
கணத்தாக்கு என்பது உந்த மாறுபாட்டிற்கு சமமான அளவாகும்.
 
இதன் அலகு \(\text{கிகி மீவி}^{-1}\) அல்லது \(\text{நியூட்டன் விநாடி}\) அகும்.
 
உந்த மாற்றம் அல்லது கணத்தாக்கு கீழ்க்கண்ட இரு வழிகளில் செயல்படலாம்.
 
1. பொருளின் மோதல் காலம் குறையும் போது அப்பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு அதிகமாகும்.
 
2. பொருளின் மோதல் காலம் மதிப்பு அதிகமாகும போது அப்பொருளின் மீது செயல்படும் கணத்தாக்கு விசையின் மதிப்பு குறையும்.
 
எடுத்துக்காட்டுகள்:

இருச்சகக்கர வாகனம்  சீரற்ற பரப்பில் பயணிக்கும் போது கணத்தாக்கு விசை அதிர்வுகளை குறைப்பதற்கு சுருள்வில் அமைப்புகளும் அதிர்வுறிஞ்சிகளும் வைக்கப்ட்டுள்ளன.
 
shutterstock6952403141.jpg
 
கிரிக்கெட் விளையாட்டில், வேகமாக வரும் பந்தினை பிடிக்க, விளையாட்டு வீரர் கையினை பின்னோக்கி இழுத்து மோதல் காலத்தை அதிகரிக்கிறார். இது அவரது கையில், பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவை குறைக்கிறது.
 
shutterstock_144372946.jpg