PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
விசை:
 
விசை என்பது ‘இழுத்தல்’ அல்லது ‘தள்ளுதல்’ என்ற புறச்செயல் வடிவம் ஆகும்.
 
பொருளானது சீரான திசைவேகத்தில் நகரும் போது, அதனை தொடர்ந்து நகர்த்த புறவிசை ஏதும் தேவையில்லை.
 
புறவிசைகளின் தொகுபயன் மதிப்பு சுழியாக (பூஜ்ஜியமாக) இல்லை எனில் திசைவேக மதிப்பில் உறுதியாக மாற்றம் இருக்கும். உந்த மாற்றமானது விசையின் திசையிலேயே அமையும். இம்மாற்றமானது அதன் எண் மதிப்பிலோ, திசையிலோ அல்லது இவை இரண்டிலுமோ ஏற்படலாம்.
 
விசை முடுக்கத்தினை ஏற்படுத்துகிறது. சீரான வட்ட இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேகத்தின் எண்மதிப்பு மாறிலியாகும். இருப்பினும் பொருளானது வட்டப்பாதையின் ஒவ்வோர் புள்ளியிலும் தனது திசையினை
தொடர்ந்து மாற்றி கொள்வதால், திசைவேக மாறுபாடு ஏற்படுகிறது. இது முடுக்கத்தினை சுழற்சி ஆரத்தில் ஏற்படுத்துகிறது. இம்முடுக்கம் மைய விலக்கு முடுக்கம் எனப்படும். இம்முடுக்கம் உருவாக காரணமான விசை மைய விலக்கு விசை என்றழைக்கப்ப டுகிறது.
 
விசையின் அலகு:
 
விசையின் SI அலகு \text{நியூட்டன்} (N) ஆகும். அதன் CGS அலகு \text{டைன்} (dyne) ஆகும்.
 
1 \text{நியூட்டன்} என்பதன் வரையறை:
 
1 \text{கிலோகிராம்} நிறையுடைய பொருளொன்றை 1 \text{மீவி}^{-2} அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 \text{நியூட்டன்} (1N) ஆகும்.
 
1 \text{நியூட்டன்}\ = 1 \text{கிகிமீவி}^{-2}
 
1 \text{டைன்} என்பதன் வரையறை:
 
1 \text{கிராம்} நிறையுடைய பொருளொன்றை 1 \text{செமீவி}^{-2} அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 \text{டைன்} ஆகும்.
 
1 \text{டைன்}\ =\ 1 \text{கிசெமீவி}^{-2}
 
1 \text{நியூட்டன்}\ =\ 10^5 \text{டைன்}
 
ஓரலகு விசை:
 
1 \text{கிலோகிராம்} நிறையுள்ள பொருளொன்றை 1 \text{மீவி}^{-2} அளவிற்கு முடுக்கவிக்க தேவைப்படும் விசையின் அளவு \text{ஒரு நியூட்டன்} (1\ N) ஆகும். இது ஓரலகு விசை என்றழைக்கப்படுகிறது.
 
ஈர்ப்பியல் அலகு விசை (Gravitational unit of force):
 
ஓரலகு நிறையுள்ள(1 \text{கி கி}) பொருளொன்றை புவியின் ஈர்ப்பு முடுக்கதிற்கு (9.8 \text{மீ வி}^{-2}) இணையாக முடுக்கவிக்க தேவைப்படும் விசையின் அளவு ஈர்ப்பியல் அலகுவிசை எனப்படும்.
 
ஈர்ப்பியல் அலகுவிசையின் SI அலகு, \text{கிலோகிராம் விசை} (kgf) ஆகும். CGS அலகு முறையில் \text{கிராம் விசை} (gf) ஆகும்.
 
1\ kg f\ =\ 1\ kg\ \times 9.8\ ms^{-2}\ =\ 9.8 \text{நியூட்டன்}
 
1\ g f\ =\ 1\ g \times 980\ cms^{-2}\ =\ 980 \text{டைன்}