PDF chapter test TRY NOW
முந்தைய பகுதியில், தொகுபயன் விசைகளைக் கற்றுக்கொண்டோம்.
இந்த பகுதியில், விசையின் சுழல் விளைவுகளைப் பற்றி படிப்போம்.
கதவுகளில் கைப்பிடி எந்த இடத்தில் பொருந்தியுள்ளது என நீங்கள் கவனித்துள்ளீர்களா?
இது எப்போதும் கதவின் விளிம்பில் அமைந்துள்ளது,
மற்ற இடத்தில் வைக்காமல் ஏன் எப்போதும் கதவுவின் விளிம்பருகில் அவை பொருத்தப்பட்டுள்ளன?
கதவினை, விளிம்புகளில் பிடித்து தள்ளுவது அல்லது இழுப்பது எளிதானதா? அல்லது
சுவரின் இணைப்பு கீல் (Hinges) பகுதியின் அருகில் பிடித்து இழுப்பது அல்லது தள்ளுவது எளிதானதா?
கதவினை திறக்க அல்லது மூட, விசையினை விளிம்புகளில் செலுத்துவது எளிதானதாகும்.
கதவின் இணைப்பு அச்சிலிருந்து விளிம்பானது தொலை தூரத்தில் உள்ளது. எனவே அங்கு செயல்படும் விசை அதிக சுழல் விளைவினை ஏற்படுத்துகிறது. கதவில் உள்ள நிலையான இணைப்பு அச்சு, ‘சுழல் அச்சு’(Axis of rotation) என்றழைக்கப்படும்.
ஒரு தடியின் ஒரு முனையை தரையிலோ அல்லது சுவரிலோ இணைத்து, மறுமுனையில் தடியின் தொடுகோட்டின் வழியே விசை செயல்படுத்தப்பட்டால்,. தடியானது நிலைப்புள்ளியை மையமாக வைத்து சுழலும். இது “சுழற்புள்ளி” என்று அழைக்கப்படுகிறது.