PDF chapter test TRY NOW
முந்தைய பகுதியில், விசையின் சுழல் விளைவுகளைக் கற்றுக்கொண்டோம்.
இந்த கோட்பாட்டில், விசையின் திருப்புத்திறன் பற்றி படிப்போம்.
விசையின் திருப்புத்திறன்:
விசையானது ஒரு புள்ளியில் அல்லது ஒரு அச்சில் ஏற்படுத்தும் சுழற் விளைவினை அதன் திருப்புத்திறன் மதிப்பின் மூலம் அளவிடபடுகிறது. இது விசையின் திருப்புத்திறன் என அறியப்படுகிறது.
ஒரு புள்ளியில் மீது செயல்படும் விசையின் திருப்புத்திறன் \(\tau\) ஆனது, விசையின் எண் மதிப்பு \(F\)-ற்கும், நிலையான புள்ளி மற்றும் விசை செயல்படும் அச்சிற்கும் இடையே உள்ள செங்குத்து தொலைவு \(d\) க்கும், உள்ள பெருக்கற் பலனைக் கொண்டு அளவிடப்படுகிறது.
\(\tau =\ F \times d\)
இது ஒரு வெக்டார் அளவாகும். இதன் திசையானது விசை செயல்படும் அச்சின்திசை மற்றும் தொலைவின் தளத்திற்கு,
Answer:
செங்குத்து திசையில் இருக்கும்.
இதன் SI அலகு நியூட்டன் மீட்டர் (\(N m\)) அகும்.