PDF chapter test TRY NOW
கணத்தாக்கு (Impulse):
மிகக் குறுகிய காலஅளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை, கணத்தாக்கு விசை எனப்படும்.
'F' எனும் விசை ஒரு பொருளில் 't' காலத்திற்குச் செயல்படும் போது, ஏற்படும் கணத்தாக்கு (J)ன் மதிப்பு, விசை மற்றும் கால அளவின் பெருக்கற் பலனுக்கு சமமாக இருக்கும்.
கணத்தாக்கு, J\ =\ F \times t - (1)
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியின்படி,
F\ =\ \frac{\Delta p}{t}
\Delta p என்பது t கால இடைவெளியில் ஏற்படும் உந்தமாற்றம் என்பதை குறிக்கிறது.
\Delta p\ =\ F \times t - (2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) லிருந்து,
கணத்தாக்கு, J\ =\ \Delta p
கணத்தாக்கு என்பது உந்த மாறுபாட்டிற்கு சமமான அளவாகும்.
இதன் அலகு \text{கிகி மீவி}^{-1} அல்லது \text{நியூட்டன் விநாடி} அகும்