PDF chapter test TRY NOW
முந்தைய பகுதியில், விசையின் திருப்புத்திறன் பற்றி கற்றுக்கொண்டோம்.
இந்த கோட்பாட்டில், இரட்டை பற்றி படிப்போம்.
இரட்டை (Couple):
இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இரு வேறு புள்ளிகளின் மீது எதிர் எதிர் திசையில் செயல்பட்டால், அவை ‘இரட்டை விசைகள்’ அல்லது ‘இரட்டை’ என்றழைக்கப்படும். அவை ஒரே நேர்க்கோட்டில் செயல்படாது.
இரட்டைகளின் தொகுபயன்விசை மதிப்பு சுழியாதலால் (பூஜ்ஜியம்) இவை நேர்க்கோட்டு இயக்கதினை ஏற்படுத்தாது. ஆனால் இவை சுழல்விளைவினை ஏற்படுத்தும். இதை இரட்டைகளின் திருப்புத்திறன் என்றழைக்கிறோம்.
Example:
நீர் குழாய் திறத்தல் மற்றும் மூடுதல், திருகின் சுழற்சி, பம்பரத்தின் சுழற்சி முதலானவை.
இரட்டையின் சுழற்விளைவு, அதன் திருப்புத் திறன் மதிப்பு கொண்டு அளவிடப்படுகிறது. இம்மதிப்பு ஏதெனும் ஒரு விசையின் எண்மதிப்பு மற்றும் இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு, இவைகளின் பெருகற்பலனுக்கு சமமாகும்.
இரட்டையின் திருப்புத்திறன்(M)ஆனது, விசையின் எண் மதிப்பு F-ற்கும், இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு (S) க்கும், உள்ள பெருக்கற் பலனைக் கொண்டு அளவிடப்படுகிறது.
\(M\ =\ F \times S\)
இதன் SI அலகு நியூட்டன் மீட்டர் (\(N m\)), CGS அலகு முறையில டைன் செ.மீ \(dyne cm\) ஆகும்.
விசையின் திருப்புத்திறன் ஒரு வெக்டார் அளவாகும்.
திருப்புத்திறனின் திசை, பொருட்களின் சுழற்சி வலஞ்சுழியாக இருப்பின் எதிர்க்குறியாகவும், இடஞ்சுழியாக இருப்பின் நேர்க்குறியாகவும் கொள்ளப்ப டுவது மரபாகும். இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
வலஞ்சுழி சுழற்சி
இடஞ்சுழி சுழற்சி