PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
YCIND20220907_4431_Divya - Structural organisation of animals 1_06.png
பெண் இனப்பெருக்க மண்டலத்தின் முக்கிய உறுப்புகள்
 
அண்டகங்கள்:
 
அண்டகம் பெண் புணர்புழை உறுப்பாகும். அட்டையின் உடலில் உள்ள \(11\)ஆவது கண்டத்தின் வயிற்றுப்பகுதியில் ஓரிணை அண்டகங்கள் உள்ளன.
அண்டகம் சுருண்ட நாடா போன்ற தோற்றம் உடையது.
அண்டகத்தில் இருந்து அண்டங்கள் வெளிப்படுகின்றன. அண்டங்கள் இனப்பெருக்கத்துக்கு காரணமான சினை செல்கலாகும்.
 
அண்டக்குழல்:
 
இது ஒரு சிறிய குழல் போன்று அண்டகத்தில் இருந்து உருவாகிறது.
 
பொது அண்ட நாளம்:
 
இரு பக்கமும் அமைந்துள்ள அண்டக்குழல்கள் ஒன்றாக இணைந்து ஒரு பொது அண்ட நாளமாக உருவாகிறது.
 
யோனி:
 
இது ஒரு பேரிக்காய் வடிவ பெண் இனப்பெருக்க உறுப்பாகும். யோனி அட்டையின் உடலின் பின்புறத்தில்  \(11\)ஆவது கண்டத்தின் வயிற்றுப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது.
 
reproduction.jpg
அட்டையின் இனப்பெருக்க மண்டலம்