PDF chapter test TRY NOW
உங்களுக்கு இப்படி ஏற்பட்ட அனுபவம் உள்ளதா?
ராம் ஒரு இறுக்கமான ஜாடியை திறக்க முயல்கிறான். ஆனால் இயலவில்லை. அவன் அம்மாவிடம் உதவி கேட்கிறான். அம்மா சிறிது சுடு நீரை ஜாடியின் மூடியில் ஊற்ற சொல்கிறார். ராம் அவ்வாறே செய்கிறான். ஆஹா! ஜாடி எளிதில் திறந்து விட்டது.
வெப்பத்தினால் ஜாடியின் மூடி விரிவடைதல்
செயல்முறை:
- ஒரு தகரடப்பாவில் ஆணியை அடிக்கவும், பின்பு ஆணியை வெளியில் எடுத்து விடவும் . பிறகு, ஆணியைத் திரும்பச் செலுத்தித் துளையானது ஆணி புகும் அளவுக்குப் பெரியதாக இருக்கிறாதா என பர்க்கவும் . பிறகு, ஆணியை வெளியில் எடுத்து ஓரு கைபிடியில் பிடித்து, மெழுகுவத்தி கொண்டு வெப்படுத்தவும். அதன் பிறகு இப்போது ஆணியை தகரடப்பாவில் செலுத்தவும். ஆணி துளையினுள் உட்புகுதல் கடினமாக இருப்பதை உணர முடியும்.
- இப்படி நடக்க காரணம் வெப்பம் திண்மங்களை விரிவடையச் செய்கிறது. திண்ம மூலக்கூறுகள் விரிவடைந்து வேகமாக நகர்ந்து முன்பிருந்ததை விட அதிக இடத்தினை ஆக்கிரமிக்கிறது. இதிலிருந்து நமக்கு பொருட்கள் வெப்பபடுத்தும்பொழுது விரிவடைந்து குளிர்விக்கப்பட்டதும் சுறுக்கமடைகின்றன என்று தெரிகிறது .
எனவே, பொருட்கள் வெப்பப்படுத்தும் பொழுது அவற்றின் நீளம், பரப்பளவு மற்றும் கனஅளவில் ஏற்படும் மாற்றமானது, அதன் வெப்பநிலை மாற்றத்தைப் பொருத்து இருக்கும்.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அது விரிவடைவதை அப்பொருளின் "வெப்ப விரிவடைதல் "எனப்படும் .