PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
திண்மப் பொருளுக்கு எப்பேழுதும் ஒரு  வடிவம் உள்ளது. எனவே அது சூடுபடுத்தும் போது, அது எல்லா பக்கங்களிலும் விரிவடைகிறது. திண்மபொருளானது மூன்று வகையான விரிவாக்கங்களுக்கு உட்படுகிறது.
 
 
அவைகள் முறையே:
 
1. நீள் விரிவு
 
2. பரும விரிவு
 
3. கனஅளவு விரிவு
நீள் விரிவு:
 
வெப்பத்தினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு, நீள் விரிவு எனப்படும்.
  
பரப்பு விரிவு:
 
பொருளின் பரப்பில் ஏற்படும் அதிகரிப்பு, பரப்பு விரிவு எனப்படும்.
 
கனஅளவு விரிவு:
 
பொருளின் கனஅளவில் ஏற்படும் அதிகரிப்பு, கனஅளவு  விரிவு எனப்படும்.
செயல்முறை:
 
4 (3).png
வெப்பதினால் நீளம் விரிவடைதல்
  • மிதிவண்டிச் சக்கரக்கம்பியின்  ஒரு முனையை ஒரு மரக்கட்டையின் மேல் வைத்து அதனுடன் மின்கம்பியை இணைக்கவும் .
  • மிதிவண்டிச் சக்கரகம்பியும், மின் கம்பியும் மரக்கட்டையில் சேரும் இடத்தில், அவை நகராமல் இருக்க ஒரு சிறு கல்லை படத்தில் காட்டியவாறு வைக்க வேண்டும் .
  • மிதிவண்டிச் சக்கரகம்பியின் மறுமுனையை  அடுத்த மரக்கட்டையின் மேல் தளத்திற்கு இணையாக வரும்படியாக இணைக்கவும் .
  • நாணயத்தின் மேல் மின்கம்பியைச் சுற்றி அதை இரண்டாவது மரக்கட்டையின்மேல் வைத்து பொருத்தவும் .
  • நாணயத்தில் சுற்றப்பட்ட மின்கம்பிக்கும், மிதிவண்டிசக்கர கம்பியின் முனைக்கும் இடையில் ஒரு மின்கலனையும், மின்விளக்கையும் வைக்க வேண்டும் . மிதிவண்டிச் சக்கர கம்பியின் முனையும், நாணயமும் ஒன்றுடன் ஒன்று தொடும் பொழுது மின்சுற்று முழுமையடைந்து மின்விளக்கு ஒளிரும் .
  • மின்விளக்கு ஒளிரவில்லை எனறால் மின்சுற்று முழுமையடையவில்லை, என்று அர்த்தம் . எனவே, மின்சுற்று முழுமை அடைந்து இருக்கிறதா என்பதனைச் சரிபார்த்து கொள்ளவும் .
  • நாணயத்திற்கும் மிதிவண்டிச் சக்கர கம்பிக்கும் இடையில் ஒரு தாளை வைத்து, தாளின் தடிமனுக்கு இணையான இடைவெளி இருக்கும் படி அமைக்கவும்  .
மின் விளக்கு ஒளிர்கிறதா?  காரணம் என்ன?
 
காரணம்:
 
மிதிவண்டிச் சக்கரகம்பியும், நணயமும் ஒன்றுடன் ஒன்று தொடாதநிலையில் மின்விளக்கு ஒளிராது. மிதிவண்டிச் சக்கரகம்பியும், நணயமும் ஒன்றுடன் ஒன்று தொடும் நிலையில் மட்டுமே, மின்விளக்கு ஒளிர்கிறது.
 
கம்பி சிறிது நேரம் சூடாக்கபட்டதும் மின்விளக்கு ஒளிர்கிறதா?
  
காரணம்:
 
மிதிவண்டிச் சக்கரக்கம்பி சூடாகும்போது, அது விரிவடையும்.  அதனால் அது நாணயத்தைத் தொடும். எனவே, மிதிவண்டிச் சக்கரக்கம்பியை சூடுபடுத்தப்படுவதால், சுற்று நிறைவடைகிறது (மூடிய சுற்று) மற்றும் மின்விளக்கு ஒளிரும். இங்கே, நேரியல் விரிவாக்கம் நடைபெறுகிறது.
 
மெழுகுவர்த்தி அணைந்து  சிறிது நேரத்துக்குப் பின் ஏன் மின் விளக்கு அணைகிறது?
  
காரணம்:
 
மெழுகுவர்த்தியை அகற்றிய பிறகு, மிதிவண்டிச் சக்கரக்கம்பிக்கு வெப்பம் பரவாது.  எனவே, மிதிவண்டிச் சக்கரக்கம்பி அதன் அசல் நிலைக்குத் திரும்பிவிடும் . அதனால் அது மீண்டும் நாணயத்தைத் தொடாது. எனவே மின்விளக்கு அணைந்துவிடும்.
 
மிதிவண்டிச் சக்கரக்கம்பியைச் சூடாக்கும் பொழுதும், குளிர்விக்கும் பொழுதும், கம்பியின்  நீளத்தில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
 
காரணம்:
 
மிதிவண்டி சக்கர கம்பியை வெப்பப்படுத்தும் பொழுது அதன் நீளம் அதிகரிக்கிறது. குளிர்விக்கும் பொழுது, அதன் நீளம் குறைகிறது.