PDF chapter test TRY NOW

நீர்மட்டமும், வெப்பநிலையும் ஓர் ஒப்பீடு
 
ஒரு பொருளின் வெப்பநிலையானது அப்பொருளின் வெப்ப ஆற்றல் பாயும் திசையைத் தீர்மானிக்கும் என்பது நமக்கு தெரியும். நீரானது உயரமான பகுதியிலிருந்து உயரம் குறைவான  பகுதிக்கு பாய்வதைப் போலவே,வெப்ப ஆற்றலானது உயர்ந்த வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருளுக்குக் கடத்தப்படுகிறது. 
 
நீரானது உயரமான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கிப் பாய்வதை நாம் பார்த்து இருப்போம். அது எந்தப்பக்கம்  நீர் மிக அதிகமாக உள்ளது, எந்தப்பக்கம் நீர் குறைவாக உள்ளது என்பதனைப் பொறுத்து இருக்காது. அது குட்டையிலிருந்து பெரிய நீர்த்தேக்கத்துக்கும் பாயலாம், அல்லது நீர்த்தேக்கத்திலிருந்து குட்டையை நோக்கியும் பாயலாம். நீர்மட்டம், நீர் பாயும் திசையைத் தீர்மானித்தது போலவே, பொருட்களின் வெப்பநிலை வெப்ப ஆற்றல் பாயும் திசையை நிர்ணயம் செய்கிறது.
வெப்பத்தொடர்பும், வெப்பச்சமநிலையும்
2.png
\(A\)-விலிருது \(B\)-க்கு வெப்பம் பரவுதல்.
  •  \(A\), \(B\) என்ற இரு பொருட்களை எடுத்து கொள்வோம்.
  • \(A\) வின் வெப்பநிலை அதிகமாகவும் \(B\) யின் வெப்பநிலை குறைவாகவும் இருக்கட்டும்.
  • \(A\) மற்றும் \(B\) இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணையும் பொழுது,வெப்பமானது வெப்பமான பொருள் \(A\)யிலிருந்து குளிர்சியான பொருள் \(B\) க்கு பாயும்.
  • இரண்டு பொருட்களும் ஒரே வெப்பநிலைக்கு வரும் வரை வெப்பமனது தொடந்து பரிமாற்றம் செய்யப்படும். பொருட்களின் வெப்பநிலை வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிக்கிறது .
வெப்பத்தொடர்பு:
 
ஒரு பொருள் மற்றொரு பொருளின் வெப்ப நிலையை பாதிக்குமானால் அப்பொருள்கள்  இரண்டும் வெப்பத்தொடர்பில் உள்ளன எனப்படும்.
வெப்பச்சமநிலை:
 
வெப்பத்தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அப்பொருள்கள் வெப்பச்சமநிலையில் உள்ளன எனப்படும். இரண்டு பொருட்களும் வெப்பச் சமநிலையில் உள்ள போது ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.
எடுத்துக்காட்டாக:
 
அடுப்பிலிருந்து எடுத்து சமையலறை மேடையில் வைக்கப்பட்ட பால்பாத்திரமும், சமையலறை மேடையும் வெப்பத்தொடர்பில் உள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் அவை ஒரே வெப்ப நிலைக்கு வருகின்றன, அப்போது அவை வெப்பச்சமநிலையில் உள்ளன.