PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரு பொருள்களின் வெப்ப ஆற்றலானது உயர்ந்த வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருளுக்குக் கடத்தப்படுகிறது.
உதாரணங்கள்:
 
1. நீங்கள் ஒரு சூடான தேநீர் குடுவையை கையில் பிடித்து கொண்டு இருக்கிறீர்கள் எனில்,
 
shutterstock473091709.jpg
  
வெப்ப ஆற்றல் ஆனது,
 
அ. உன் உடலிலிருந்து தேநீர் குடுவைக்குச் செல்கிறதா? அல்லது
  
. தேநீர்  குடுவையில்  இருந்து உடலுக்கு பாய்கிறதா?
  
விடை:
  • வெப்பமான பொருள்தேநீர் குடுவை.
  • வெப்பம் குறைவான பொருள்: கை.
ஆகையால், இங்கு தேநீர் குடுவையிலிருந்து, உடலுக்கு வெப்பம் பாய்வதாக அறிகிறோம். ஆனால், எவ்வாறு? 
 
வெப்ப ஆற்றலானது உயர்ந்த வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருளுக்குக் கடத்தப்படுகிறது என நமக்கு தெரியும். எனவே,  வெப்ப ஆற்றலானது தேநீர் குடுவையிலிருந்து கைக்கு பாய்கிறது. ஏனெனில்  உடலின் (கை) வெப்பநிலை தேநீர் குடுவையின் வெப்பநிலையை விட குறைவு.
 
2. ஒரு கோடை நாளில் நீ வெயிலில் நடக்கிறாய் வெளி வெப்பநிலையானது \(40 °C\)அளவில் உள்ளது.
 
shutterstock1086853274w300.jpg.
சூரிய ஒளியில் நிற்கும் பொழுது
  
வெப்ப ஆற்றல் ஆனது,
 
அ. உன் உடலிலிருந்து காற்று மூலக்கூறுகளுக்கு பாய்கிறதா அல்லது
  
ஆ. காற்று மூலக்கூறுகளில் இருந்து உன் உடலுக்கு பாய்கிறதா?
  
விடை: இங்கு,
  • வெப்பமான பொருள்: காற்று
  • வெப்பம் குறைவான பொருள்உடல்
மனித உடலின் சராசரி வெப்பநிலை \(37°C\).எனவே காற்று மூலக்கூறுகளிலிருந்து வெப்பமானது உடலுக்கு பாய்கிறது.
  
3. நீ ஒரு குளிர்காலநாளில் தெருவில் நடந்து கொண்டு இருக்கிறாய். வெளி வெப்பநிலையானது \(23°C\) அளவில் உள்ளது.
 
mountainmanlookingatsnowmountainpersonpersonimagew300.jpg
குளிரில் நிற்க்கும்பொழுது
 
வெப்ப ஆற்றல் ஆனது,
 
 அ. உன் உடலில் இருந்து காற்று மூலக்கூறுகளுக்கு பரவுகிறதா ?அல்லது
  
ஆ. காற்று மூலக்கூறுகளில் இருந்து உன் உடலுக்கு பாய்கிறதா?
 
விடை: இங்கு,
  • வெப்பமான பொருள்: உடல்  
  • வெப்பம் குறைவானபொருள்: காற்று
மனித உடலின் சராசரி வெப்பநிலை \(37°C\). எனவே உடலில் உள்ள வெப்பமானது காற்று மூலக்கூறுகளுக்கு செல்கிறது.