PDF chapter test TRY NOW
வெப்பமும் வெப்பநிலையும் ஒன்றல்ல, அவை இரு மாறுபட்ட காரணிகள்;
ஒப்பிடக்கூடிய அளவுருக்கள் | வெப்பம் |
வரையறை | ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் வெப்பம் என்றழைக்கப்படுகிறது. |
பண்புகள் | வெப்பமானது வெப்பநிலையை மட்டும் பொறுத்தது அல்ல. ஒரு பொருளில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதையும் பொறுத்தது. |
அளவீடுகள் | வெப்பமானது அப்பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஒரு அளவீடு. |
SI அலகுகள் | ஜூல் |
மற்ற அலகுகள் | கலோரி |
குறியீடு | Q |
அளவிடும் கருவிகள் | கலோரிமீட்டர். |
ஒப்பிடக்கூடிய அளவுருக்கள் | வெப்பநிலை |
வரையறை | ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியினை அளப்பது வெப்பநிலைஎன்று பெயர். |
பண்புகள் | வெப்பநிலையானது ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் நகர்கின்றன (அ) அதிர்கின்றன என்பதை பொறுத்தது. |
அளவீடுகள் | வெப்பநிலையானது மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலைக் குறிப்பிடும் ஒரு அளவீடு. |
SI அலகுகள் | கெல்வின் |
மற்ற அலகுகள் | செல்சியஸ், பாரன்ஹீட் |
குறியீடு | T |
அளவிடும் கருவிகள் | வெப்பநிலைமானி |
கலோரி
கலோரி என்பது, ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஆகும்.

வெப்பநிலை உயர்வு
உங்களுக்கு தெரியுமா?
ஆப்பிரிக்காவிலுள்ள லிபியாவில் 1922 ம் வருடத்தில் ஒரு நாள் காற்றின் வெப்பநிலையானது, 59°C எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது.
Important!
அண்டார்டிகா கண்டத்தின் வெப்பநிலை தான் உலகிலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாக அளவிடப்பட்டுள்ளது. அது தோராயமாக -89°C என கணக்கிடப்பட்டுள்ளது.
வெப்பநிலை நீரின் உறைநிலைக்கு குறைவாக இருக்கும் பொழுது எதிர் குறியானது (-) உபயோகிக்கப்படுகிறது. நீரின் உறைநிலை 0°C எனக் கணக்கிடப்படுகிறது.
நீரானது, 0°C வெப்பநிலையில் பனிக்கட்டியாக மாறும்.
நமது உடலின் சராசரி வெப்பநிலை 37°C ஆகும். காற்றின் வெப்பநிலை 15°C முதல் 20°C அளவிற்கு இருக்கும் பொழுது, நமது உடல் குளிர்ச்சியாக உணர்கிறது.