PDF chapter test TRY NOW

ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை, அளப்பதற்கு "வெப்பநிலை " என்று பெயர். வெப்பநிலையின் \(SI\) அலகு கெல்வின்  (\(K\)) ஆகும்.
வெப்பநிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவைகள் முறையே:
 
1. செல்சியஸ் \((°C)\)
 
2. பாரன்ஹீட் \((°F)\)
 
3. கெல்வின் \((K)\)
 
வெவ்வேறு வெப்பநிலையில் உள்ள இரு பொருட்கள் ஒன்றை ஒன்று தொடும் பொழுது, வெப்பமானது எந்த திசையில் பாய்கிறது என்பதை, அவற்றின் வெப்பநிலை  தீர்மானிக்கிறது .
 
செய்முறை:
 
Thermometer.png
வெப்பநிலைமானியை கொண்டு வெப்பநிலையை அளவிடுதல்
  • ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும் . அதில் தண்ணீர் நிரப்பி. பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். மேலே காட்டப்பட்டுள்ளபடி வெப்பநிலைமானியை தண்ணீரின் மேல் பொருத்தவும்.
Important!
வெப்பநிலைமானி பாத்திரத்தை தொடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அதிக வெப்பநிலையில் வெப்பநிலைமானி உடைந்துவிடும்.
  • சிறிது நேரத்தில் பாத்திரத்தில் உள்ள நீரின் வெப்பநிலையை வெப்பநிலைமானியை பார்த்து குறித்து கொள்ளவும்.
  • வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதை நீங்கள் பார்க்க முடியும். நீர் கொதிக்கும் பொழுது அதன் வெப்பநிலை \(100°C\). கொதிநிலைக்கு பின், நீரின் வெப்பநிலை உயர்வது இல்லை.
  • கொதிநிலையில் உள்ள நீரை மேலும் வெப்பப்படுத்தும் பொழுது அந்த நீரானது தொடர்ந்து வெப்பத்தை உள்வாங்கினாலும் அதன் வெப்பநிலை உயர்வது இல்லை.
  • எந்த வெப்பநிலையில் நீர் கொதிக்கத் துவங்கி, பிறகு வெப்பநிலை உயராமல் நிலையாக இருக்கிறதோ அந்த வெப்பநிலைக்கு நீரின் "கொதிநிலை" என்று பெயர்.