PDF chapter test TRY NOW
மரச்சக்கரமும் இரும்பு வலயமும் :
மரச்சக்கரத்தில் இரும்பு விளிம்பு பொருத்தும் பொழுது
- மரச்சக்கரத்தின் விட்டமானது, இரும்பு வளையத்தின் விட்டத்தை விட சற்றுப் பெரியதாக இருக்கும்.
- எனவே இரும்பு வளையத்தை மரச்சக்கரத்தின் மீது மிக எளிதாகப் பொருத்த இயலாது. இரும்பு வளையத்தை முதலில் அதிக வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த வேண்டும். பின்பு,வெப்பத்தினால் இரும்பு வளையம் விரிவடையும் இப்பொழுது எளிதாக மரச்சக்கரத்தின் மீது இரும்பு வளையத்தைப் பொருத்த இயலும் .
- பிறகு இரும்பு வளையத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு உடனடியாக குளிர்விக்கும் பொழுது, இரும்பு வளையம் உடனடியாகச் சுருங்குகி, இரும்புவளையமானது மரச்சக்கரத்தின் மீது மிக இறுக்கமாகப் பொருந்தி விடுகிறது.
கடையாணி :
- இரண்டு உலோகத் தகடுகளை ஒன்றிணைக்க கடையாணி பயன்படுத்தப்படுகிறது. நன்றாக வெப்பப்படுத்தப்பட்ட கடையாணியை தகடுகளின் துளை வழியே செலுத்தி, கடையாணியின் அடிப்பக்க முனையைச் சுத்தியலைக் கொண்டு அடித்து, மறுபுறம் ஒரு புதிய தலைப்பகுதி உருவாக்கப்பட்டு இரும்பு தகடுகள் இணைக்க படுகிறது.
வெப்பபடுத்திய பின் கடையாணியை பொருந்துதால்
இரயில் தண்டவாளங்கள்:
- இரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பொழுது அதன் இரு தண்டவளங்களுக்கும் இடையே இடைவெளி விட்டு அமைப்பதை நாம் பார்க்க முடியும்.
வெப்பதினால் தண்டவாளத்தின் நீளம் விரிவடைதல்
- இப்படி அமைக்க காரணம் வெயில் காலங்களில் வெப்பத்தின் காரணமாக தண்டவாளமானது நீள் விரிவுக்கு உள்ளாகும். அப்பொழுது தண்டவாளத்தின் நீளம் அதிகரிக்கும்.
- அந்த நீளம் தண்டவாளத்தை பாதிக்காமல் இருக்கவே, தண்டவாளங்கள் அமைக்கும் பொழுது, சிறு இடைவெளி விட்டு அமைக்கப்படுகின்றது.