PDF chapter test TRY NOW
புரதங்கள் உடலின் கட்டுமான தொகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும், இவை உடலின் வளர்ச்சி, செல்களை பழுதுபார்த்தல் மற்றும் பலவிதமான செயல்களுக்கு தேவைப்படுகின்றன.
எ.கா: முட்டை வெள்ளை கரு , பருப்புகள், பால், கோழி, மீன், சோயா பீன்ஸ், முளைகட்டிய பயிறுகள், கொட்டைகள்
புரதத்தின் பயன்கள்:
- உடல் வெப்பம் சீராக இருக்க உதவும்.
- செல்களின் வளர்ச்சிக்கு முக்கியம்.
- செரிமானத்திற்கு உதவும்.
- தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
புரத உணவு வகைகள்
செயல்பாடு:
நோக்கம்:
கொடுக்கப்பட்டுள்ள உணவில் புரதம் இருப்பதை சோதித்து அறிதல்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை கரு, காப்பர் சல்பேட் கரைசல், சோடியம் ஹைட்ராக்சைடு, புன்சன் பர்னர் மற்றும் சோதனைக் குழாய்.
செய்முறை:
- ஒரு சிறிய அளவு உணவு மாதிரியை எடுத்து (முட்டையின் வெள்ளைக் கரு) சோதனைக் குழாயில் போடவும்.
- சோதனைக் குழாயில் தண்ணீர் சேர்த்து நன்றாக குலுக்கவும்.
- சோதனைக் குழாயை \(1\) நிமிடம் சூடாக்கவும்.
- சோதனைக் குழாய் குளிர்ந்த பிறகு, அதில் சுமார் \(2\) சொட்டு காப்பர் சல்பேட் கரைசல் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு சேர்க்கவும்.
விளைவு:
உணவு ஊதா அல்லது நீல நிறமாக மாறுகிறது.
புரோட்டீன் சோதனை
சோதனை முடிவு:
இவ்வாறு நிறம் மாறினால் உணவில் புரதம் உள்ளது உறுதி செய்யப்படுகிறது.
Important!
அதிகமான புரதம் உள்ள உணவு சோயா பீன்ஸ் ஆகும்.