PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வைட்டமின்கள் உடலை பாதுகாக்கும் உணவுகள் ஆகும்.
நம் உடலில் நடக்கும் பல்வேறு வேதி வினைகளுக்கு இவை மிகவும் முக்கியம்.
Example:
காய்கறிகள், பழங்கள், கறி இறைச்சி, தானியங்கள்
வைட்டமின்களின் வகைகள்
  • நீரில் கரையும் வைட்டமின்கள் - \(B\) மற்றும் \(C\).
  • கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - \(A\), \(D\), \(E\) மற்றும் \(K\).
வைட்டமின் B
வைட்டமின் \(B\) ஆரோக்கியமான நரம்பு மண்டலம். அதிக சிவப்பு அணு உற்பத்தி ஆகிய செயல்களுக்கு மிக அவசியமானது. மேலும், இது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.
 
வைட்டமின்  \(B\) ஒரு கூட்டு குழுமம் ஆகும். இதில், பின்வரும் வகைகள் உள்ளன.
  • வைட்டமின்  \(B1\)
  • வைட்டமின்  \(B2\)
  • வைட்டமின்  \(B3\)
  • வைட்டமின்  \(B5\)
  • வைட்டமின்  \(B6\)
  • வைட்டமின்  \(B9\)
  • வைட்டமின்  \(B12\)
உணவு வகைகள்:
 
வைட்டமின்  \(B\) குழுமம், முழு தானியம், பளபளப்பு செய்யப்படாத அரிசி, பால், மீன், பட்டாணி, பச்சை காய்கறிகள் போன்ற உணவு வகைகளில் அதிக அளவு காணப்படுகிறது.
 
shutterstock_1696786360.jpg
வைட்டமின் B நிறைந்த உணவுகள்
வைட்டமின் C:
இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், பலமான பல் ஈறுகளுக்காகவும் மிகத் தேவையான வைட்டமின் ஆகும். மேலும், இது முக்கியமாக செல்களின் வளர்ச்சி மற்றும் பழுதுநீக்கலுக்கு தேவைப்படுகிறது.
 
உணவு வகைகள்:
 
அதிக அளவில் நெல்லிக்காய், ஆரஞ்சு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றில் காணப்படுகிறது. மேலும், முக்கியமாக நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட \(20\) மடங்கு அதிக அளவில் வைட்டமின் \(C\) உள்ளது.
 
shutterstock_362885486.jpg
வைட்டமின் B நிறைந்த உணவுகள்