PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உடலுக்கு ஆற்றல் தரும் உணவு கொழுப்புகள் ஆகும். கார்போஹைட்ரேட்டைவிட உடலுக்கு சக்தி கொடுக்கும்.
எ.கா: வெண்ணை, மீன், பால், நெய், பாலாடை கட்டி, முட்டை மஞ்சள் கரு, கொட்டைகள்
 
கொழுப்புகளின் பயன்கள்:
  • உடல் வெப்பத்தை சீராக வைக்கும்.
  • செல்களை பாதுகாக்கும்.
  • உடலுக்கு சக்தி கொடுக்கும்.
வகைகள்
1. நல்ல கொழுப்புகள் 
 
நிறைவுறாக் கொழுப்பு இதில் உள்ளது. (ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு, பலநிறைவுறாக் கொழுப்பு).
 
shutterstock748793968jpg.jpg
நிறைவுறாக் கொழுப்புகள்
 
எ.கா: கொட்டைகள் , கடலை வெண்ணைய், பாதாம் வெண்ணைய், தாவர எண்ணெய்
  
2. கெட்ட கொழுப்புகள்
 
நிறைவுற்ற கொழுப்பு இதில் உள்ளது. எ.கா:பேக்கேரி உணவுகள், கேக், பதப்படுத்தப்பட்ட உணவுகள்
 
high-fat-foods-1487599_1280.jpg
நிறைவுற்ற கொழுப்புகள்
செயல்பாடு 1:
நோக்கம்:
 
உணவில் கொழுப்பைக் கண்டறிய இந்த சோதனை உதவும்.
 
தேவையான பொருட்கள்:
 
தேங்காய் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், நல்லண்ணெய் மற்றும் சில காகிதம்.
 
செய்முறை:
  • காகிதத்தில் சில துளிகள் எண்ணெயை ஊற்றி உங்கள் விரலால் மெதுவாக தேய்க்கவும்.
  • நிலக்கடலை போன்ற கொட்டைகளைப் பயன்படுத்தினால், நிலக்கடலையை நசுக்கி காகிதத்தில் வைக்கவும்.
  • நிலக்கடலையை காகிதத்தில் மெதுவாக தேய்க்கவும்.
விளைவு மற்றும் முடிவு:
 
பிசுபிசுப்பாகவும், காகிதம் மறுபுறம் மங்கலாக தெரியும். ஆகவே, கொடுக்கப்பட்ட உணவில் கொழுப்பு உள்ளது.
செயல்பாடு 2:
இரண்டாவது, செயல்பாட்டில் உணவு மாதிரியுடன் எத்தனால் சேர்ப்பதால், கொடுக்கப்பட்ட உணவில் கொழுப்பு உள்ளதைக் கண்டறியலாம். 
 
இதற்கு, எடுக்கப்பட்ட உணவு மாதிரியை (திட அல்லது திரவ உணவு) நன்றாக மசிக்கவும் அல்லது திரவமாக இருக்கும் பொழுது, எத்தனால் சேர்த்து நன்கு கலக்கவும்.
 
விளைவு மற்றும் முடிவு:
 
எடுக்கப்பட்ட உணவு மாதிரியில் கொழுப்பு உள்ளது என்றால், பால் போன்ற திரவமாக மாறும். இதன் மூலம் எடுக்கப்பட்ட உணவு மாதிரி கொழுப்பு நிறைந்த உணவாகும்.
 
Emulsion test_Shutterstock.png
கொழுப்பு உணவில் இருப்பதை சோதிக்கும் செயல்பாடு