
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநாம் உண்ணும் உணவு சரிவிகித உணவாக இல்லாதபோது, அதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும்.இதன் காரணமாக ஏற்படும் நோய்கள் ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள் எனப்படும்.
புரத குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள்
புரத குறைபாடு | அறிகுறிகள் |
குவாஷியோர்கர் | முகம் கால்களில் வீக்கம், உடல் வளர்ச்சி குன்றுதல், உப்பிய வயிறு, வயிற்று போக்கு. |
மராஸ்மஸ் | மெதுவான உடல் வளர்ச்சி, மெலிந்த உடல். |


மராஸ்மஸ் மற்றும் குவாஷியோர்கர் பாதித்த குழந்தைகள்
தாது உப்புக்கள் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள்
தாது உப்புக்கள் | நோய்கள் |
கால்ஷியம் | ரிக்கெட்ஸ் |
பாஸ்பரஸ் | ஆஸ்டியோமலேசியா |
அயோடின் | குழந்தைகள் - கிரிட்டினிசம் பெரியவர்கள் -முன்கழுத்துக் கழலை |
இரும்புச்சத்து | இரத்தச்சோகை |

ஆரோக்கியமான மற்றும் ரிக்கெட்ஸ் பாதித்த எலும்புகள்
Important!
அங்கன்வாடி மையம்
இந்தியாவில் உள்ள குழந்தைகள் சுகாதார பாதுகாப்பு மையம்அங்கன்வாடி எனப்படும். இது \(1975\)ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் குறிக்கோள் குழந்தைகளின் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை ஒழிப்பதே ஆகும். மேலும், கர்ப்பிணி மற்றும் பால் ஊட்டும் தாய்மார்கள் இதன் மூலம் பயன் அடைகின்றனர்.