PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வைட்டமின் A
இது கண்களுக்கும் கண் பார்வைக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் செல் வளர்ச்சி, தோல் பளபளப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியம் ஆகும்.
 
shutterstock_558453145.jpg
வைட்டமின் A நிறைந்த உணவுகள்
Example:
முட்டை, பால், நெய், கேரட், சோளம், மஞ்சள் நிற பழங்கள், கீரைகள்
வைட்டமின் D
வைட்டமின் D வலிமை மிக்க எலும்புகளுக்கு அவசியம். சுண்ணாம்பு சத்தினை உறிஞ்சி உடலில் சேமிக்கவும் தேவைப்படுகிறது. மேலும் இது சூரிய ஒளியில் அதிகம் உள்ளது. எனவே நம் தோல் சூரிய ஒளியிலிருந்து இதனை உறிஞ்சுகிறது.
 
shutterstock_1131287756.jpg
வைட்டமின் D நிறைந்த உணவுகள்
Example:
மீன் எண்ணைய், பால், முட்டை
Important!
சூரிய கதிர் வீச்சில் இருந்து நம்மைக் காக்க நாம் பயன்படுத்தும் களிம்புகள் (Sunscreen lotionவைட்டமின் D உற்பத்தியை \(95%\) குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
வைட்டமின் E
இது இதய நோய்களைத் தடுக்கவும், தோல் பளபளப்பிற்கும், இனவிருத்தி செயல்பாடுகளுக்கும் மிக முக்கியமானது.
 
shutterstock_380849872.jpg
வைட்டமின் E நிறைந்த உணவுகள்
Example:
பச்சை காய்கறிகள், ஆப்பிள், மாம்பழம், முழு கோதுமை, தாவர எண்ணெய், சூரியகாந்தி விதைகள்
வைட்டமின் K
காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைவதற்கும் மேலும் அதிக ரத்த போக்கை தடுக்கவும் இந்த வைட்டமின் பயன்படும்.
 
shutterstock_1300276171.jpg
வைட்டமின் K நிறைந்த உணவுகள்
Example:
தக்காளி, முட்டைக்கோசு, பச்சை காய்கறிகள், முட்டை, பால் பொருட்கள்