PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஆரோக்கியம் என்பது, நோய் இன்றி வாழ்வது மட்டும் அன்று. மேலும், ஒரு தனி மனிதனின் உடல் ம்ற்றும் மன நலனையும், சமூக நலனையும் சார்ந்தது ஆகும். இவை அனைத்திற்கும் அடிப்படை, சத்தான உணவு ஆகும்.
ஆகவே, நோயற்ற உடல் நலம் ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதற்கு, உணவில் உள்ள சத்துக்களின் அளவும் மிக முக்கியமான ஒன்று ஆகும்.
உடல் செயல்பாடு மற்றும் வளர்ச்சி, இதற்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நீரும் சரியான அளவில் உள்ள உணவு மிகவும் அவசியம். அவ்வாறு உட்கொள்ளும் உணவை சரிவிகித உணவு என்போம்.
பின்வரும் காரணங்களுக்கு சரிவிகித உணவு மிகவும் அவசியம்.
- உடல்நலம், மனநலம் பேணுவதற்கு அவசியம்.
- உடலின் செயல் திறன் அதிகரிக்க உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
- உடல் வளர்ச்சிக்கு உதவும்.
ஆனால், தவறான உணவுப் பழக்கம் பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கும். உடல் பருமன், இதய நோய்கள், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற பல உபாதைகள் ஏற்படும்.
சரிவிகித உணவின் பிரமிடு
சரிவிகித உணவு என்பது வைட்டமின், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புகள் இவை அனைத்தும் கலந்த கலவையான உணவு ஆகும். இதனுடன் நார் சத்தக்களும் நீரும் சரியான அளவில் இருந்தால் இந்த சத்துக்கள் உடலுக்குள் உறிஞ்சப்படும்.
- வைட்டமின் \(C\) நிறைந்த உணவுகளை குறைந்த நேரம் மட்டுமே சமைக்க வேண்டும்.
- கேரட், வெண்டை போன்ற சில காய்கறிகளை அறுத்த பின் கழுவினால் அதன் சத்துக்கள் குறைந்து விடும்.
- கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு சக்தி கொடுத்தாலும் அதிக அளவில் உட்கொண்டால் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும்.
Important!