PDF chapter test TRY NOW
பல விதமான சத்துக்கள் நிரம்பிய முளைக்கட்டிய பயறு எப்படி செய்வது என இந்தச் செயல்பாட்டில் காணலாம்.
முளைக்கட்டிய பயறு என்பது பயறுகளின் விதைகளில் இருந்து சிறுசிறு வேர்கள் முளைப்பது ஆகும்.
தேவையான பொருட்கள்
பச்சைப் பயறு, தண்ணீர், மெல்லிய வடிக்கட்டும் துணி.
செய்முறை
- சிறிது அளவு பயறு விதைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- அடுத்த நாள் அதனை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதனை மெல்லிய துணியில் கட்டி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வைக்கவும்.
- துணி காயும்போது அவ்வப்போது தண்ணீர் தெளிக்கவும்.
விளைவு
விதைகளில் இருந்து வெள்ளை நிறத்தில் சிறு சிறு வேர்கள் முளைவிட்டு இருக்கும். இதுவே, முளைகட்டியப் பயறு எனப்படும்.
முளைகட்டிய பயறு
ஊட்டசத்து விவரங்கள்
இது குறைவான கலோரிகள் உள்ள உணவு ஆகும். இதில் வைட்டமின் B, C மற்றும் K உள்ளது. மேலும் நார்சத்துக்கள் நிரம்பிய உணவு ஆகும். சுவைக்கு ஏற்ப இதனை பச்சையாக அல்லது வேக வைத்து உண்ணலாம். மசாலா, காய்கறிகள் கலந்து கலவையாகவும் உண்ணலாம்.
முளைக்கட்டிய பயறு மற்றும் காய்கறிகள்
Reference:
https://pixabay.com/photos/seed-grain-plant-bean-sprouts-nuts-945877/