![](http://uploads.cdn.yaclass.in/upload/pumpa/img_4.png)
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதாது உப்புக்கள் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களில் அத்தியாவசியமான சத்துக்கள் ஆகும். இவை, உடல் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகின்றன. உடலில் நிகழும் பல்வேறு செயல்பாடுகளுக்கு இவைத் தேவையாகின்றன.
![shutterstock_766312699.jpg](https://resources.cdn.yaclass.in/0c27438b-447c-43c5-8141-c9307f014662/shutterstock766312699w444.jpg)
தாது உப்புகள்
Example:
ஹார்மோன்கள் மற்றும் நொதிகளின் உற்பத்திக்கும் வலுவான எலும்புகள்
தாது உப்புகள் எல்லா வகையான உணவுகளிலும் பல்வேறு அளவுகளில் உள்ளன. ஆனால், பருப்பு வகைகள், கீரைகள், முட்டை, பால், மீன், பழங்கள் போன்ற உணவுகளில் அதிகம் காணப்படுகின்றன.
தாது உப்புக்களின் பணிகள் மற்றும் காணப்படும் உணவுகள்
கால்ஷியம் - பலமான எலும்புகள், இரத்தம் உரைதல், வலுவான நரம்பு மண்டலம் ஆகிய செயல்பாடுகளுக்கு தேவை.
![shutterstock_366258458.jpg](https://resources.cdn.yaclass.in/6058cbb0-185e-48ca-bc92-ac365ea84de7/shutterstock366258458w300.jpg)
கால்சியம் நிறைந்த உணவுகள்
Example:
பால், தயிர், பாலாடை கட்டி, கொட்டை வகைகள்
பாஸ்பரஸ் - செல் மற்றும் திசு சீரமைப்பு, பலமான எலும்புகள் ஆகியவற்றுக்கு தேவை.
![shutterstock_1357397582.jpg](https://resources.cdn.yaclass.in/305db24f-9c7f-47c8-9a09-67aae4e0c783/shutterstock1357397582w300.jpg)
பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள்
Example:
இறைச்சி , கொட்டை வகைகள், பீன்ஸ், பால் பொருட்கள், முழு தானியங்கள்.
அயோடின் - தைராய்டு ஹார்மோன் உற்பத்தி போன்றவற்றிற்கு தேவை.
![shutterstock_1351194494.jpg](https://resources.cdn.yaclass.in/eca7e851-6576-4d77-af14-f1a68df41b24/shutterstock1351194494w300.jpg)
அயோடின் நிறைந்த உணவுகள்
Example:
இறால், டியுனா மீன், கடல் பாசி
இரும்புச்சத்து - ஹிமோகிலோபின் உற்பத்தி, ரத்த விருத்தி, மூளை வளர்ச்சிக்கு தேவையாகிறது.
![shutterstock_388311052.jpg](https://resources.cdn.yaclass.in/90c28fdd-c974-4867-9a33-8aa24e70ff5e/shutterstock388311052w300.jpg)
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்
Example:
ஈரல்,இறைச்சி, கொட்டைகள், பீன்ஸ், உலர் பழங்கள்.
Important!
அதிசய மரம் முருங்கை
முருங்கை இலைகளில் வைட்டமின் A, C, பொட்டாசியம், கால்ஷியம், இரும்புச்சத்து, புரதம் ஆகியவை உள்ளன. மேலும் இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் உள்ளது. (Antioxidants). உலகளாவிய முருங்கை உற்பத்தியில் \(80\)% உற்பத்தி இந்தியாவில் தான் நடக்கிறது. மேலும், அமெரிக்கா, தென் கொரியா, சீனா, கனடா, ஜெர்மனி போன்ற பல நாடுகள் நம்மிடம் இருந்து இறக்குமதி செய்கின்றன.
![shutterstock_776762029.jpg](https://resources.cdn.yaclass.in/0b0f4990-b770-4f96-92cd-7514c61b8037/shutterstock776762029w300.jpg)
முருங்கை மரத்தின் பாகங்கள்
நீர்
உடலின் சீரான செயல்பாடுகளுக்கு நீர் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக \(2\) லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இது உடலின் வளர் சிதை மாற்ற செயல்களுக்கு முக்கியம் ஆகும்.
![shutterstock_1589732293.jpg](https://resources.cdn.yaclass.in/9bcf5e50-bee7-461a-b12a-0a8002683dda/shutterstock1589732293w400.jpg)
நீர்