PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஆக்ஸிஜன் வாயுவை வைத்து அதன் இருப்பில் ஏதேனும் ஒருப் பொருளை வெப்பப்படுத்தினால்  அது கண்டிப்பாக ஒளி மற்றும் வெப்பத்தை ஏற்படுத்தும். இது எரிதல் எனப்படும். ஒளி ஏதும் இல்லாமல் வெப்பம் மட்டும் வெளியேறினால் அது உள்ளெரித்தல் ஆகும்.
 
நாம் எதை எரித்தாலும் அதற்கு கண்டிப்பாக ஆக்ஸிஜன் தேவை.
Example:
மெழுகுவர்த்தி, கறி, காகிதம், மரம், சமையல் எரிவாயு
 shutterstock416864710 (1).jpg 
மரம் எரித்தல்
 
அந்த ஆக்ஸிஜன் நம்மைச்சுற்றிலும் பரவி உள்ளக் காற்றில் இருந்து கிடைக்கின்றது. தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் கிடைத்தால் மட்டுமே எந்தப் பொருளாக இருந்தாலும் எரியும். அது கிடைக்காமல் போனால் எரிதல் நின்று விடும். எரிவதற்கு ஆக்ஸிஜன் தேவை என நிரூபணம் செய்ய ஒரு சிறிய சோதனையை மேற்கொள்ளலாம்.
 
candlesw751.png
 
1. இரண்டு மெழுகுவர்த்திகளை \(1\) & \(2\) எனப் பெயரிட்டு சமஉயரம் மற்றும் சமதளம் கொண்ட இடத்தில் ஒளி ஏற்றவும்.
 
shutterstock686698336.jpg
 
2. மெழுகுவர்த்தி \(2\)ஐ ஒரு முகவைக் கொண்டு மூடவும்.
 
shutterstock144374707.jpg
 
3. சிறிது நேரத்தில் மெழுகுவர்த்தி \(2\) தானாக அணைந்து விடும்.
4. ஆனால் மெழுகுவர்த்தி \(1\) நாமாக அணைக்கும் வரை அல்லது வெளிவிசை அணைக்கும் வரைத் தொடர்ந்து எரியும்.
5. இதனை வெவ்வேறு அளவு கொண்ட முகவைகளைக் கொண்டு செய்யவும். எ.கா: \(200\) மி.லி, \(500\) மி.லி.
6. முகவையால் மூடிய பின் மெழுகுவர்த்தி அணைய எடுத்துக்கொள்ளும் நேரத்தை அட்டவணைப் படுத்தவும்.
 
கொள்கலனின்
கன அளவு (மிலி)
மெழுகுவர்த்தி அணைய
எடுத்துக்கொள்ளும் காலம் (வி)
  
  
  
  
காரணம்
  • இதன் காரணம் என்னவெனில், முகவையால் மூடிய பின் உள்ளே உள்ள ஆக்ஸிஜன் தீரும் வரை எரிந்து, பின் அணைந்து விட்டது.
  • இதன் மூலம் நாம் எரித்தலுக்குக் கண்டிப்பாக ஆக்ஸிஜன் தேவை என அறிய முடியும்.
வளிமண்டல உயர் அடுக்குகளில் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும். எனவே ராக்கெட் போன்றவற்றைச் செலுத்தும்போது அதன் ஏரிபொருளில் கண்டிப்பாக ஆக்ஸிஜன் வாயுவை நிரப்பி இருப்பர்.
 
shutterstock1918809284.jpg
விண்ணில் ராக்கெட் செலுத்துதல்