PDF chapter test TRY NOW
மனிதர்கள் தங்கள் உணவைத் தானே சமைத்துக் கொள்கின்றனர். விலங்குகள் தங்கள் உணவைத் தானேத் தேடி உண்கின்றன. அதுபோல தாவரங்கள் எங்கும் நகராமல் தம் உணவுகளை எவ்வாறு உண்கின்றன?
பசும் தாவரங்கள் தங்கள் உணவுகளைத் தாமேத் தயாரித்துக்கொள்ளும் செயல் ஒளிச்சேர்க்கை எனப்படும். அதற்கு கார்பன் டை ஆக்ஸைட், சூரிய ஒளி, நீர் முதலியவைத் தேவைப்படும்.
ஒளிச்சேர்க்கை
ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜன் வாயு வெளியிடப்படுகிறது என்பதை பின்வரும் சோதனை மூலம் காணலாம்.
- ஒரு கண்ணாடிப் புனலில் ஹைடிரில்லா செடியின் ஒரு கிளையை வைக்கவும்.
- அதனை ஒரு நீர் நிரப்பப்பட்ட முகவையில் தலைகீழாக வைக்கவும்.
- பின் ஒரு சோதனை குழாயைப் புனலின் மீது படத்தில் உள்ளவாறு வைக்கவும்.
- இந்த அமைப்பை சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்கவும்.
- நம்மால் சோதனைக் குழாயில் உள்ள நீரில் வாயு குமிழிகள் மேல் எழுவதைக் காண இயலும்.
ஒளிச்சேர்க்கையில் ஆக்சிஜன் வெளியாதல்
- தாவரம் ஒளிச்சேர்க்கையின் மூலம் வெளியிட்ட ஆக்ஸிஜென் வாயுவே குமிழிகளாக வெளியிடப்பட்டது.
- பின்னர் சோதனை குழாயின் அருகில் ஒரு எரியும் தீக்குச்சியைக் கொண்டு வந்தால் அது சுடர்விட்டு எரியும்.
- இதன் மூலம் குழாயில் உள்ள வாயுவானது ஆக்ஸிஜன் என அறியலாம்.