
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகை – கால் எலும்புகள்
மனிதனின் கை – கால் எலும்புகள் இரண்டு இணைகளைக் கொண்டவை, அவை முன்னங்கை எலும்புகள் பிடித்தல், எழுதுதல் போன்ற பணிகளுக்கும், பின்னங்கால் எலும்புகள் நடப்பது, அமர்வது போன்ற பணிகளுக்கும் உதவுகிறது.

கை எலும்புகள்

கால் எலும்புகள்
எலும்பு வளையம்
அச்சுச்சட்டகத்துடன் முன்னங்கைகளையும், பின்னங்கால்களையும் சேர்ப்பதற்கு முறையே மார்பு வளையம் மற்றும் இடுப்பு வளையம் உதவுகின்றன.

மார்பு வளையம்

இடுப்பு வளையம்
Important!
1. நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறியது நமது உள்காதில் உள்ள அங்கவடி (stapes) எலும்பு ஆகும். இது 2.8 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது (சராசரி நீளம்). நமது உடலில் நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும்.
2. குழந்தைகள் பிறக்கும் பொழுது \(300\)க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன. அவர்கள் வளரும் பொழுது சில எலும்புகள் இணைந்து ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆகையால் முதிர்ச்சியடைந்த மனிதனின் எலும்புக் கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.